வரலாற்றில் இன்று : ஜூலை மாதம் 24

413
on this day july

2010ஆம் ஆண்டு – ஆஸிக்கு எதிராக பாக் வரலாற்று வெற்றி


 

2010ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லீட்ஸில் அமைந்துள்ள ஹெடிங்கிலி மைதானத்தில் இடம்பெற்ற பாகிஸ்தான் மாறும் அவுஸ்திரேலிய அணிகள் மோதிய 2ஆவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கட்டுகளால் வெற்றி பெற்று 15 வருடங்ளுக்குப் பின் அவுஸ்திரேலிய அணியை டெஸ்ட் போட்டியில் தோற்கடித்த பெருமையைப் பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தமது 1ஆவது இனிங்ஸில் முஹமத் ஆமிர் மற்றும் முஹமத் ஆசிப் ஆகியோரின் பந்துகளை எதிர் கொள்ள முடியாமல் 88 ஓட்டங்களுக்கு சுருண்டது. பின் பாகிஸ்தான் அணி தமது 1ஆவது இனிங்ஸில் 258 ஓட்டங்களைப் பெற்றது. அதன் பின் தமது 2ஆவது இனிங்ஸைத் தொடர்ந்த அவுஸ்திரேலிய அணி 349 ஓட்டங்களைப் பெற்றது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 180 என்ற வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யபப்பட்டது. இதனை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 7 விக்கட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்து 15 வருடங்ளுக்கு பின் அவுஸ்திரேலிய அணியை டெஸ்ட் போட்டியில் தோற்கடித்த பெருமையைப் பெற்றது.

 

1981ஆம் ஆண்டு – டக் போலின்ஜர் பிறப்பு


 

அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்து வீச்சாளரான டக் போலின்ஜரின் பிறந்த தினமாகும். 1.92 மீற்றர் உயரமுடைய அற்புதமாகப் பந்து வீசும் திறமை கொண்ட இடதுகை வேகப்பந்து வீச்சாளரான டக் போலின்ஜர் அவுஸ்திரேலிய அணிக்காக 2009ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையிலான காலப்பகுதியில் 12 டெஸ்ட் போட்டிகள், 39 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 12 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கட்டுகளையும், 39 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 62 விக்கட்டுகளையும், 9 டி20 போட்டிகளில் 9 விக்கட்டுகளையும் இவர் வீழ்த்தியுள்ளார்.

 

ஜூலை மாதம் 24ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்


 

1888 ஆர்தர் ரிச்சர்ட்சன் (அவுஸ்திரேலியா)

1929 ஆல்ஃபிரட் பின்ஸ் (மேற்கிந்திய தீவுகள்)

1935 ஜார்ஜ்  வர்னல்ஸ்  (தென் ஆபிரிக்கா)

1938 ஜான் ஸ்பார்லிங் (நியூசிலாந்து)

1947 சாஹிர் அப்பாஸ் (பாகிஸ்தான்)

1976 செர்ரியால் பம்புரி  ((அவுஸ்திரேலியா)

1982 டெஸ்ஸா வான் டெர் கன் (நெதர்லாந்து)

1985 ஜுவான் தெரான் (தென் ஆபிரிக்கா)