இராணுவம் மற்றும் மேரியன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

297
Chilaw Marians vs SSC

23 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளின் ஜூலை 22ஆம் திகதி எஸ்.எஸ்.சீ மற்றும் என்.சி.சி மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளில் இராணுவ அணி மற்றும் சிலாபம் மேரியன்ஸ் அணிகள் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குத் தெரிவாகின.

இராணுவ அணி மற்றும் கொழும்பு கிரிக்கட் கழகத்திற்கு இடையிலான போட்டி

எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி கொழும்பு கிரிக்கெட் கழகம் சார்பாக தனுஷ் பீரிஸ் 50 ஓட்டங்களையும் ரோஷன் அனுருத்த 54 ஓட்டங்களையும் லஹிரு ஜயக்கொடி 36 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதியில் கொழும்பு கிரிக்கட் கழகம் நியமித்த 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 209 ஓட்டங்களை மட்டுமே  பெற்றது. திறமையாகப் பந்து வீசிய இராணுவ அணி கொழும்பு கிரிக்கட் கழகத்திற்கு நெருக்கடி கொடுத்து குறுகிய ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தியது.

Photo Album – Army SC vs CCC SLC U-23 Cricket

210 ஓட்டங்கள் எனும் இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இராணுவ அணியின் ஆரம்ப சில துடுப்பாட்ட  வீரர்களான அஷான் ரந்திக, ஹிமாஷ லியனகே மற்றும் சஷீன் தில்ராங்க முறையே 85,40,39 ஓட்டங்களைக் குவித்து இராணுவ அணிக்கு இலகுவான வெற்றியைப் பெற்றுக்கொடுத்தனர்சிறப்பாக விளையாடிய இராணுவ அணி வீரர்கள் 20.2 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் 29.4 ஓவர்களில் 210 ஓட்டங்களைக் குவித்து இறுதிப் போட்டியில் தமது இடத்தைப் பதிவு செய்தனர்.

கொழும்பு கிரிக்கட் கழகம் 209/9 (20)  : ரொஷான் அனுருத்த 54 , தனுஷ்  பீரிஸ் 50 , லஹிரு ஜயக்கொடி 36, யோஷான்  டி சில்வா 3/39 , சஞ்சிக ரித்ம 2/33 , நளின் பெரேரா 2/33

இராணுவ அணி 210/3 (29.4) : அஷான் ரந்திக 85 , ஹிமாஷ லியனகே 40 , சஷீன் தில்ராங்க  39 *, சில்வா 2/44


சிங்கள கிரிக்கட் கழகம் மற்றும் சிலாபம் மேரியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி

என். சி. சி. மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிங்கள கிரிக்கட் கழகம் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய சிலாபம் மேரியன்ஸ் அணி சார்பாக மஹிந்த கல்லூரியின் பழைய மாணவன் சலன டி சில்வா 90 ஓட்டங்களைக் குவித்து சிலாபம் மேரியன்ஸ் அணியை வலுப்படுத்தினார். மேலும் அவருக்குத் துணையாக ரிஷித் உபமல் 31 ஓட்டங்களைப் பெற மேரியன்ஸ் அணி 49.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றது.

Photo Album –  Chilaw Marians CC vs SSC SLC U-23 Cricket

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சிங்கள கிரிக்கட் கழகத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே நெருக்கடி கொடுத்த மேரியன்ஸ் கிரிக்கட் கழகம் 30 ஓவர்களில் 116 ஓட்டங்களுக்கு சிங்கள கிரிக்கட்  கழகத்தைக் கட்டுப்படுத்தி 104 ஓட்டங்களால் பிரமாண்டமான வெற்றிபெற்றது. துடுப்பாட்டத்தைப் போலவே பந்து வீச்சிலும் ஜொலித்த சலன டி சில்வா 20 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளைக் கைப்பற்றி மேரியன்ஸ் அணியின் நாயகன் ஆனார். சரித் ராஜபக்ஷ சிறப்பாகப் பந்து வீசி 18 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளைக் கைப்பற்றினார். கிரிஷான் சஞ்சுல தனி ஒருவனாக 71 ஓட்டங்களைப் பெற்ற பொழுதும் அணியின் மற்ற வீரர்கள் கை கொடுக்காததால் அணி தோல்வியைச் சந்தித்தது.

சிலாபம் மேரியன்ஸ் 220(49.2) சலன  டி சில்வா 90 , ரிஷித் உபமல் 31 , சரித் ராஜபக்ஷ 21 *, ஆண்ட்ரூ  3/23 , அதிஷ 2/40 , நுவான் துஷார 2/41

சிங்கள கிரிக்கட் கழகம்  116(29.1) : கிரிஷான் சஞ்சுல  71 , ரமேஷ் மென்டிஸ் 26 சரித் ராஜபக்ஷ 3/18 , சலன  டி சில்வா 3/20 , தில்ஷன் 3/16

இறுதிப் போட்டியில் சிலாபம் மேரியன்ஸ் அணி மற்றும் இராணுவ அணிகள் மோதவுள்ளன.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்