7 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட 15 பேர் அடங்கிய இலங்கை அபிவிருத்தி அணி தென் ஆபிரிக்கா நோக்கி இன்று அதிகாலை பயணமாகியுள்ளது.
இந்த 15 பேர் கொண்ட இலங்கை அபிவிருத்தி அணியின் தலைவராக காலி கிரிக்கட் கழக வீரர் மற்றும் முன்னாள் மஹிந்த கல்லூரி வீரருமான ருமேஷ் புத்திக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரைப் பற்றிக் கூறப் போனால் இடதுகைத் துடுப்பாட்ட வீரரான ருமேஷ் புத்திக்க 52 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 44.33 என்ற துடுப்பாட்ட சராசரியில் 3500க்கும் அதிகமான ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இவரின் தலைமையின் கீழ் தென் ஆபிரிக்கா நோக்கி செல்லும் இலங்கை அபிவிருத்தி அணியில் 8 துடுப்பாட்ட வீரர்கள், 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
Photo Album – Sri Lanka Development Squad departure to South Africa
2012ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் போது மஹேல ஜயவர்தனவின் கீழ் இலங்கை அணியில் பங்குபற்றி இருந்த அகில தனஞ்சயவும் இந்த அணியில் இடம் பிடித்துள்ளார்.
இலங்கை அபிவிருத்தி அணி தென் ஆபிரிக்க எமர்ஜிங் அணியோடு 7 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 உத்தியோக பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் 1ஆவது ஒருநாள் போட்டி 27ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.
முழு அணி விபரம்
1. ருமேஷ் புத்திக்க (காலி கிரிக்கட் கழகம்),
2. ஹசான் துமிந்த (கோல்ட்ஸ்),
3. பபசர வதுகே (தமிழ் யூனியன்),
4. சந்துன் வீரக்கொடி (என்சிசி)
5. லஹிரு மிலன்த (றாகம கிரிக்கட் கழகம்),
6. சதீர சமரவிக்ரம (கோல்ட்ஸ்),
7. ஏஞ்சலோ ஜெயசிங்க (கோல்ட்ஸ்),
8. பிரியமல் பெரேரா (கோல்ட்ஸ்) ,
9. கசுன் மதுஷங்க (எஸ்எஸ்சி),
10. செஹான் மதுஷங்க (சரசென்ஸ்),
11. அனுக் பெர்னாண்டோ (என்சிசி)
12. கேஷன் விஜேரத்ன (கோல்ட்ஸ்),
13. அகில தனஞ்சய (கோல்ட்ஸ்),
14. சஞ்சய சதுரங்க (பாணந்துறை விளையாட்டுக் கழகம் ),
15. அமில அபொன்சோ (றாகம கிரிக்கட் கழகம்),
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்