2009ஆம் ஆண்டு – லோர்ட்ஸ் மைதான வரலாற்று வெற்றி
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற அவுஸ்திரேலிய இங்கிலாந்து அணிகள் மோதிய ஏஷஸ் கிரிக்கட் தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி தமது முதல் இனிங்ஸில் 425 ஓட்டங்களைப் பெற்றது. பின் தமது முதல் இனிங்ஸில் அவுஸ்திரேலியா 215 ஓட்டங்களுக்கு சுருண்டது. 210 ஓட்டங்கள் முன்னிலையில் தமது 2ஆவது இனிங்ஸில் ஆடிய இங்கிலாந்து அணி 6 விக்கட் இழப்பிற்கு 311 ஓட்டங்களைப் பெற்று தமது ஆட்டத்தை இடைநிறுத்தி அவுஸ்திரேலிய அணிக்கு 522 என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தது. இந்த வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி வீரர்களால் 406 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது. அதனால் இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 115 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்த வெற்றியானது இங்கிலாந்து அணி எஷஸ் கிரிக்கட் தொடரில் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் 75 வருடங்களுக்குப் பிறகு பெற்ற வெற்றியாகும்.
வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூலை மாதம் 19
ஜூலை மாதம் 20ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
1911 பக்கா ஜிலானி (இந்தியா)
1934 டக் பாட்கெட் (இங்கிலாந்து)
1963 கேத்தரின் காம்ப்பெல் (நியூசிலாந்து)
1974 கரோலின் சலமோன்ஸ் (நெதர்லாந்து)
1975 அத்திக்-உஸ்-ஜமான் (பாகிஸ்தான்)