சங்கா அசத்தல், ஜமேக்கா அணிக்கு இலகுவான வெற்றி

380
Sanga

இந்தியாவில் வருடாந்தம் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறுவது போன்று மேற்கிந்திய தீவுகளில் வருடாந்தம் கரீபியன் பிரிமியர் லீக் டி20 நடைபெற்று வருவது வழமை. அந்த அடிப்படையில் இந்த வருடம் கரீபியன் பிரிமியர் லீக் டி20  போட்டிகள் கடந்த ஜுன் மாதம் 29ஆம் திகதி ஆரம்பித்து நடைபெற்றுவருகிறது. இந்த தொடரின் 17ஆவது போட்டி நேற்று ஜமேக்காவில் அமைந்துள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சங்கா விளையாடும் ஜமேக்கா தளவாஹஸ் அணி புனித கிட்ஸ் மற்றும் நெவிஸ் பெட்ரியொட்ஸ் ஆகிய அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித கிட்ஸ் மற்றும் நெவிஸ் பெட்ரியொட்ஸ் அணி ஜமேக்கா தளவாஹஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்புவிடுத்தது.

போட்டியின் சுருக்கம்

ஜமேக்கா தளவாஹஸ் 183/6 (20)

குமார் சங்கக்கார 65
ரோவ்மன் பவல் 35
ஷகீப் அல் ஹஸன் 34*
கிரிஷ்மர் சாண்டோக்கி 24/3

குமார் சங்கக்கார 47 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 65 ஓட்டங்களைப் பெற்று இருந்தார். அவரது துடுப்பாட்ட வீதம்  138.29 ஆக காணப்பட்டது.

புனித கிட்ஸ் மற்றும் நெவிஸ் பெட்ரியொட்ஸ் 75/10 (15.5)

ஜொனாதன் கார்ட்டர் 23
ஏவின் லீவிஸ் 17
கிரிஷ்மர் சாண்டோக்கி 16
கெஸ்ரிக் வில்லியம்ஸ் 19/3
டேல் ஸ்டெயின் 5/2
ஷகீப் அல் ஹஸன் 2/2
எண்டர் ரசல் 11/2

இந்தப் போட்டியில் ஜமேக்கா தளவாஹஸ் அணி 108 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.  போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கை அணியின் நட்சத்திரம் குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்