ஜூலை 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் நடந்து முடிந்த போட்டிகளின் விபரங்கள்

ப்ளு ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம் 2-0 சிவில் செக்யூரிட்டி விளையாட்டுக் கழகம்

களுத்தறை வெர்னன் பெர்னாண்டோ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ப்ளு ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம் 2-0 என்ற அடிப்படையில் சிவில் செக்யூரிட்டி விளையாட்டுக் கழகத்தை வெற்றி கொண்டது. E.B.சன்னா இருபத்தோராவது நிமிடத்திலும் இடோவு ஹமீட் முப்பத்தொன்பதாவது நிமிடத்திலும் கோல் போட்டனர்.

மேலும்  சிவில் செக்யூரிட்டி விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த W.N.M.பெரேரா, W.D.வீரமந்திரி, D.S.ஹெட்டியாராச்சி மற்றும் M.K.P.டி சில்வா ஆகியோருக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.


ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் 0-1 ரினௌவ்ன் விளையாட்டுக் கழகம்

களனி கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இப்போட்டியில் ரினௌவ்ன் விளையாட்டுக் கழகம் ஜாவா லேன் விளையாட்டுக் கழகத்தை 1-0 என்ற ரீதியில் வெற்றி கண்டது. இருபத்தைந்தாவது நிமிடத்தில் ரினௌவ்ன் விளையாட்டுக் கழகத்திற்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஜொப் மைக்கேல் கோலாக்கினார்.

போட்டியில் ஒரேயொரு மஞ்சள் அட்டை ஜாவா லேன் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த தம்மிக செனரத்திற்கு வழங்கப்பட்டது.


க்ரிஸ்டல் பலஸ் விளையாட்டுக் கழகம் 2-3 கொழும்பு கால்பந்தாட்டக் கழகம்

சிட்டி கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 3-2 எனும் கோல் அடிப்படையில் கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் வெற்றி பெற்றது. மோமஸ் யாப்போ 12வது நிமிடத்தில் பெனால்ட்டி மூலம் கோலைப் போட்டார். மேலும் நாகுர் மீரா 83வது நிமிடத்திலும் சேர்வான் ஜோஹர் 92வது நிமிடத்திலும் கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் சார்பாக கோல்களைப் போட்டனர். க்ரிஸ்டல் பலஸ் விளையாட்டுக் கழகத்திற்காக அஞ்சன விக்கிரமசிங்க 44வது மற்றும் 63வது நிமிடங்களில் கோல் போட்டார்.

போட்டியின் 93வது நிமிடத்தில் க்ரிஸ்டல் பலஸ் விளையாட்டுக் கழக வீரர் மொஹமட் சிபானிற்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. மேலும் க்ரிஸ்டல் பலஸ் விளையாட்டுக் கழகத்தின் மதுசங்க சில்வா, M.M.M. முபீஸ், M.S.S. ஒஸ்மான், M.N.A.மொஹமட், விதுரங்க பண்டார ரத்நாயகவிற்கும் கொழும்பு கால்பந்தாட்டக் கழகத்தின் M.H.M.ரமீஸ், ஒலயேமி மற்றும் ரிஸ்னியிற்கும் மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.


நியூ யங்ஸ் விளையாட்டுக் கழகம் 2-1 சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம்

வென்னப்புவ அல்பெர்ட் பீரிஸ் மைதானத்தில் போட்டி நடைபெற்றது. போட்டியை நியூ யங்ஸ் விளையாட்டுக் கழகம் 2-1 அடிப்படையில் கைப்பற்றியது. ஹசித ப்ரியங்கர நியூ யங்ஸ் விளையாட்டுக் கழகம் சார்பாக 29வது மற்றும் 43வது நிமிடங்களில் கோல்களைப் போட்டார். சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் சார்பாக எரந்த பிரசாத் 13வது நிமிடத்தில் கோலடித்தார்.

நியூ யங்ஸ் விளையாட்டுக் கழகத்தின் S.S.K.L.பெர்னாண்டோவிற்கு சிவப்பட்டை வழங்கப்பட்டதுடன் சோகா மற்றும் நப்ராஸ்சிற்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. மேலும் சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஹமீட் ட்ரோரே மற்றும் சஜித் தர்மபாலாவிற்கும் மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.


இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம் 0-1 சுபர் சன் விளையாட்டுக் கழகம்

ஏக்கல விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் விமானப்படை விளையாட்டுக் கழகம் 1-0 எனும் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.  சுபர் சன் விளையாட்டுக் கழகம் சார்பாக பதினோராவது நிமிடத்தில் சப்ராஸ் காய்ஸ் கோல் ஒன்றைப் போட்டார். எனினும் 66வது நிமிடத்தில் அவர் சிவப்பு அட்டை வழங்கப்பெற்று வெளியேறினார்.

மேலும் விமானப்படை விளையாட்டுக் கழகத்தின் B.S.C.பெர்னாண்டோ மற்றும் D.K. துமிந்தவிற்கும் சுபர் சன் விளையாட்டுக் கழகத்தின் க்வாபெனாவிற்கும் மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.


மாத்தறை கால்பந்தாட்டக் கழகம் 0-1 அப் கண்ட்ரி லயன்ஸ் விளையாட்டுக் கழகம்

மாத்தறை கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அப் கண்ட்ரி லயன்ஸ் விளையாட்டுக் கழகம் மாத்தறை கால்பந்தாட்டக் கழகத்தினை 1-0 எனும் கணக்கில் வெற்றி கண்டது. போட்டியின் 82வது நிமிடத்தில் சார்ள்ஸ் ஓர்லு வெற்றி கோலை அடித்தார்.

மாத்தறை கால்பந்தாட்டக் கழக வீரர்கள் S.S.K.ஆராச்சி, O.P.அசமோவாவிற்கும் அப் கண்ட்ரி லயன்ஸ் விளையாட்டுக் கழக வீரர்கள் ஒசார் மற்றும் ஜயந்தவிற்கும் மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.


திஹாரியா யூத் விளையாட்டுக் கழகம் 2-2 இலங்கை பொலிஸ் விளையாட்டுக் கழகம்

களனி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி 2-2 எனும் கோலடிப்படையில் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது. திஹாரியா யூத் விளையாட்டுக் கழகம் சார்பாக யாசர் மொஹமட் 34வது  நிமிடத்திலும் மோ பட்ரிக் 89வது நிமிடத்திலும் கோல்களைப் போட்டனர். பொலிஸ் விளையாட்டுக் கழகம் சார்பில் நிலந்த பதிரன மற்றும் கெல்வின் கனு ஆகியோர் முறையே 56வது  மற்றும் 79வது நிமிடங்களில் கோலடித்தனர்.

பொலிஸ் கழகத்தின் லங்கேஸ்வர் மற்றும் திஹாரியா யூத் விளையாட்டுக் கழகத்தின் முனாவர் , பண்டார மற்றும் ஹெட்டியாராச்சியிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.