23 வயதிற்குட்பட்ட பிரிவு 1 கிரிக்கெட் போட்டிகளில் 8 போட்டிகள் ஜூலை 6ஆம் திகதி நடைபெற்றது. இப்போட்டிகளில் பொலிஸ் விளையாட்டு கழகம், நீர்கொழும்பு விளையாட்டுக் கழகம் , சிலாபம் மாரியன்ஸ் விளையாட்டுக் கழகம், கடற்படை விளையாட்டுக் கழகம், நொன்ஸ்ரிக்ரிப்ட் விளையாட்டு கழகம், சிங்கள விளையாட்டுக் கழகம், சோனகர் விளையாட்டுக் கழகம் மற்றும் கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகம் ஆகியன வெற்றிபெற்றன .
சிலாபம் மாரியன்ஸ் மற்றும் பதுருளிய அணிகளுக்கிடையிலான போட்டி
சகலதுறை வீரர் திக்ஷில டி சில்வாவின் சகலதுறை ஆட்டத்தால் வெறும் 8 ஓட்டங்களால் பதுருளிய அணியைத் தோற்கடித்து சிலாபம் மாரியன்ஸ் அணி முக்கிய வெற்றியைப் பெற்றுக்கொண்டது
சிலாபம் மாரியன்ஸ் அணி – 234(48.1) : திக்சில டி சில்வா 75, ரிஷித் உபமல் 46, கசுன் விதுரா 32, சந்துல வீரரத்ன 3/19, ஆகாஷ் செனவிரத்ன 3/43
பதுருளிய அணி – 226 (49.3) : ஹரித் சமரசிங்க 76 *, மதுஷங்க குமார் 30, திக்ஷில டி சில்வா 3/58, லஹிரு சமரக்கோன் 2/36
குருநாகல இளைஞர் அணி மற்றும் பொலிஸ் அணிகளுக்கிடையிலான போட்டி
வெலகெதர மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் உமேஷ் சூரியபண்டார ஆட்டமிழக்காமல் பெற்ற 83 ஓட்டங்கள் மூலம் பொலிஸ் அணியானது 2 விக்கட்டுகளால் குருநாகல இளைஞர் அணியை வீழ்த்தியது.
குருநாகல இளைஞர் அணி – 243(45.5) : ரண்டீர ரணசிங்க 80, பிரபாஸ் கெப்பெட்டிபொல 40, டி சில்வா 4/40, விஜேவிக்கிரம 2/59
பொலிஸ் அணி – 244/8 (49.3) : உமேஷ் 83*, நிமங்க 33, ரண்டீர 2/44, அரவிந்த 2/44
சோனகர் அணி மற்றும் கோல்ட்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி
இரு அணிகளும் குறுகிய ஓட்டங்களைக் குவிக்க மிகவும் விறுவிறுப்பாக நடைப்பெற்ற இப்போட்டியில் சாஹிரா கல்லூரியின் பழைய மாணவன் இர்ஷாத் உமர் பெற்ற 5 விக்கட்டுகள் மூலம் சோனகர் அணியானது 29 ஓட்டங்களால் அட்டகாசமான வெற்றியைப்பெற்றது.
சோனகர் அணி – 121 (34.5) : மின்ஹாஜ் ஜலில் 20, ஷானுக 19, உஸ்மான் இஷாக் 4/28, ரவீன் சேயர் 2/22
கொழும்பு கோல்ட்ஸ் அணி – 92 (18.5) : மதுரங்க 33, லஹிரு ஜயக்கொடி 22, இர்ஷாத் உமர் 5/23, ஷானுக 3/2
ப்ளூம்பீல்ட் மற்றும் கடற்படை அணிகளுக்கிடையிலான போட்டி
ப்ளூம்பீல்ட் மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் கடற்படை அணியின் துடுப்பாட்ட வீரரான மதுர மதுஷங்கவின் உதவியுடன் கடற்படை அணி 4 விக்கட்டுகளால் வெற்றியைப் பெற்றது
ப்ளூம்பீல்ட் அணி – 171 (45.5) : தரிந்து கருணாரத்ன 39, தில்ஷன் 34, கோசல 3/16, தினுஷ்க 2/29, லஹிரு 2/39
கடற்படை விளையாட்டுக் கழகம் – 176/6 (46.3) : மதுர மதுஷங்க 51, குசல் எதிரிசூரிய 35, டேரன் எபர்ட் 2/31
நொன்ஸ்ரிக்ரிப்ட் அணி மற்றும் தமிழ் யூனியன் அணிகளுக்கிடையிலான போட்டி
கண்டி திரித்துவக் கல்லூரியின் பழைய மாணவனும், இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணியின் அங்கத்துவருமான லஹிரு குமார 5 விக்கட்டுகளைப் பெற்றுக்கொள்ள, நொன்ஸ்ரிக்ரிப்ட் அணி 74 ஓட்டங்களால் இலகுவான வெற்றியைப் பெற்றுக்கொண்டது.
நொன்ஸ்ரிக்ரிப்ட் அணி – 212 (48 ) : நிமேஷ64, பிரான்சிஸ்கோ 35, அரவிந்த 31, ஹரித் 2/16, பத்மநாதன் 2/41, பிரமோத் 2/42
தமிழ் யூனியன் – 138 (25.5) : சமிக கருணாரத்ன 58, லஹிரு குமார 5/46, லசித் 2/33
சிங்கள விளையாட்டு கழகம் மற்றும் காலி அணிகளுக்கிடையிலான போட்டி
அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது போலவே திறமை மிக்க சிங்கள விளையாட்டு கழக அணியானது காலி அணியை 6 விக்கட்டுகளால் இலகுவாக வெற்றிகொண்டது.
காலி அணி – 138 (46.2) : பவன் டயஸ் 62, அதிஷ 3/33, காதர் 3/35, பெர்னாண்டோ 2/19
சிங்கள விளையாட்டு கழகம் – 141/4 (33.2) : கிருஷான் 45, யோகன் மெண்டிஸ் 40 *, தனஞ்சய லக்ஷான் 2/22
கோல்ட்ஸ் மற்றும் ராகம அணிகளுக்கிடையிலான போட்டி
சுழற் பந்துவீச்சாளர் அகில தனஞ்சய மற்றும் வேகப் பந்துவீச்சாளர் அலி கான் ராகம அணியை குறுகிய ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்ய கோல்ட்ஸ் அணி 7 விக்கட்டுகளால் இலகுவாக வெற்றியீட்டியது.
ராகம அணி – 124 (30.3) : சஹன் நாணயக்கார 26, அமில 21, அலி கான் 3/18, அகில தனஞ்சய 3/21, சரித் 2/19
கோல்ட்ஸ் அணி – 127/3 (24.1) : பசிந்து 52, சாலிந்த 33, வீரக்கோன் 1/31
நீர்கொழும்பு மற்றும் பாணந்துறை அணிகளுக்கிடையிலான போட்டி
டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியின் பழைய மாணவனும், இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணியின் முன்னால் அங்கத்துவருமான அகீல் இன்ஹாம் சிறப்பாக விளையாடி சதம் அடிக்க நீர்கொழும்பு அணியானது பானந்துறை அணியை 37 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிகொண்டது.
நீர்கொழும்பு அணி – 265/3 (50) : அகீல் இன்ஹாம்104 *, உவின் பண்டார 61, கவின் பண்டார 56, ஷிஹான் 30, செனவிரத்ன 1/48
பாணந்துறை அணி – 228/9 (50) : சமிக 51, கமில் மிஷாரா 51*, மொஹமட் சில்மி 33, சில்வா 2/39
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்