மெஸிக்கு 21 மாத சிறைத்தண்டனை

266
Barcelona's Argentine soccer player Lionel Messi sits in court with his father Jorge Horacio Messi during their trial for tax fraud in Barcelona

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி, இறுதிப் போட்டியில் சிலி அணியிடம் தோல்வி அடைந்து ஆர்ஜென்டினா அணி கிண்ணத்தை இழந்தது. கடந்த ஆண்டும் இறுதிப்போட்டியில் சிலியிடம் தோற்றிருந்தது. இதனால் அந்த அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி சர்வதேசப் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதற்கிடையே அணியின் தலைமைப் பயிற்சியாளரும் இராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில், வரி விதிப்பை தவிர்ப்பதற்காக போலி நிறுவனங்களை உருவாக்கியதாக மெஸ்ஸி மற்றும் அவரது தந்தை ஜார்ஜ் மீது ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதில், வரி மோசடி செய்ததாக மெஸ்ஸி மற்றும் அவரது தந்தை இருவருக்கும் தலா 21 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மெஸ்ஸிக்கு 12 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் சட்டத்தின்படி, இரண்டு ஆண்டுகளுக்குள் தண்டனை பெற்றால் அதனை தற்காலிகமாக ரத்து செய்ய முடியும். எனவே, மெஸ்ஸி சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்காது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்