2018 டி20 உலகக் கிண்ணத்தில் மேலதிக 2 அணிகள்

672
World T20 main draw set to expand to 'Super 12'

2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரின் பிரதான சுற்றில், இரண்டு அணிகளுக்கு மேலதிக இடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு, தகுதிகாண் சுற்றில் மேலுமிரு அணிகளுக்கும் இடம் கிடைக்குமென்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.

இவ்வாண்டு இடம்பெற்ற தொடரில், தகுதிகாண் சுற்றில் 6 அணிகள் பங்குபற்றியதோடு, அச்சுற்றிலிருந்து 2 அணிகள் பிரதான சுற்றுக்குத் தெரிவாகி, மொத்தமாக 10 அணிகள், பிரதான சுற்றில் விளையாடியிருந்தன.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையின்படி, பிரதான சுற்றில் 12 அணிகள் விளையாடுமென எதிர்பார்க்கப்படுகிறது. தகுதிகாண் சுற்றில், மேலுமிரு அணிகளைச் சேர்த்து, 8 அணிகள் விளையாடுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், அது பிழைத்தால், 6 அணிகளிலிருந்து 4 அணிகள் தெரிவாகக்கூடிய நிலைமை ஏற்படும்.

ஆதாரம்விஸ்டன் இலங்கை

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்