சர்வதேச கால்பந்தாட்டரங்கில் இருந்து ஓய்வு பெறுகிறார் மெஸ்சி

276
Argentina forward retires from international football

உலகின் சிறந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி. ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த இவர் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

கிளப் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி முத்திரை பதித்து வருகிறார். தனது நாட்டு அணிக்காக ஆடும்போது அவரால் சிறந்த வெற்றியைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. 2014ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் அவர் சாம்பியன் பட்டம் பெற்றுக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் தோற்று ஆர்ஜென்டினா கோப்பையை இழந்தது.

தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு கோபா அமெரிக்க கோப்பையை ஆர்ஜென்டினாவுக்கு பெற்றுக் கொடுப்பார் என்று அவர் மீது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதிப் போட்டியில் தோற்று ஏமாற்றம் அடைய வைத்தார். பெனால்டி ஷுட் அவுட்டில் வாய்ப்பைத் தவறவிட்டு ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் கொடுத்தார். இதன்மூலம் மெஸ்சி கனவு கலைந்தது.

இதற்கிடையே சர்வதேசப் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்சி அறிவித்துள்ளார். நான்கு இறுதி சுற்றுக்குள் நுழைந்தும் ஒருமுறை கூட சாம்பியன் ஆக முடியாதது வேதனை அளிக்கிறது. என்னைப் பொறுத்தவரை ஆர்ஜென்டினாவின் தேசிய அணி என்பது இத்துடன் முடிந்துவிட்டது என தனது ஓய்வு அறிவிப்பின் போது மெஸ்சி தெரிவித்தார்.

இனி அவர் ஆர்ஜென்டினா அணிக்காக விளையாடமாட்டார். இதனால் 2018 உலக கோப்பையில் அவரைக் காணஇயலாது. கிளப் அணிக்காக மட்டுமே விளையாடுவார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்