யூரோ கிண்ண கால்பந்து தொடரின் இன்றைய நாக்அவுட் சுற்றின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் பிரான்ஸ், அயர்லாந்துடன் மோதியது. ஆட்டம் தொடங்கியதுமே போட்டியை நடத்தும் பிரான்ஸ் அணிக்கு பேரிடி காத்திருந்தது. ஆட்டத்தின் 2ஆவது நிமிடத்தில் அயர்லாந்தின் பிராடி கோல் அடித்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அயர்லாந்து வீரர்கள் பந்தை பிரான்ஸ் கோல் கம்பம் நோக்கி நகர்த்தினார்கள். பெனால்டி பகுதிக்குள் அயர்லாந்து வீரர் லாங் பந்தை கொண்டு வந்தார். அப்போது பிரான்ஸ் வீரர் போக்பா அவரை கிழே தள்ளினார். இதனால் அயர்லாந்து அணிக்கு பெனால்டி வாய்ப்புக் கிடைத்தது. பெனால்டி வாய்ப்பை பிராடி கோலாக மாற்றியதால் 2ஆவது நிமிடத்தில் இருந்தே அயர்லாந்து 1-0 என முன்னிலைப் பெற்றது.
அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் பலன் கிடைக்கவில்லை. இதனால் முதல் பாதியில் 1-0 என அயர்லாந்து முன்னிலை பெற்றது.
2ஆவது பாதிநேர ஆட்டம் தொடங்கியதும் பிரான்ஸ் வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதன் பயனாக ஆட்டத்தின் 58ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் கிரியேஸ்மான் அபாரமாக தலையால் முட்டி கோல் அடித்தார். பிரான்ஸ் அணியின் சக்னா கொடுத்த பந்தை அருமையாக தலையால் முட்டி கோலாக்கினார்.
அடுத்த 3ஆவது நிமிடத்தில் ஆட்டத்தின் 61ஆவது நிமிடத்தில் கிரியேஸ்மான் மேலும் ஒரு கோல் அடித்தார். அந்த அணியின் ரமி கொடுத்த பந்தை ஜிராடுக்கு கொடுத்தார். இவர் கிரியேஸ்மானுக்கு பந்தை அனுப்ப தனது இடது காலால் அருமையாக கோல் அடித்தார். இதனால் பிரான்ஸ் 2-1 என முன்னிலை பெற்றது. அதன்பின் இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை.
ஆகையால் பிரான்ஸ் 2-1 என வெற்றிபெற்று காலிறுதிக்குத் தகுதிபெற்றது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்