ஐ.பி.எல் இன் புதிய புரட்சி

316
BCCI announces mini IPL for September

இந்தியாவில் தொடங்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் பிரமாண்ட வரவேற்பைப் பெற்றுள்ளது. பி.சி.சி.ஐ.-க்கு கோடிக் கணக்கில் வருவாயை குவித்து வருகிறது. மேலும், இதில் பங்கேற்கும் அணிகளுக்கும் அதிக அளவில் வருவாய் கிடைக்கிறது. ரசிகர்களும் ஆயிரக்கணக்கில் மைதானத்தில் குவிகிறார்கள்.

.பி.எல். தொடரைத் தொடர்ந்து ‘சாம்பியன்ஸ் லீக் தொடர் நடைபெற்றது. இதில் .பி.எல். தொடரில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகளும், உலகளவில் உள்ள லீக் தொடரில் பங்குபெறும் அணிகளில் இருந்து நான்கு அணிகளும் விளையாடிவந்தன. இந்தத் தொடருக்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு கிடைக்கவில்லை.

அடுத்த வருடத்துடன் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறுவது சந்தேகம்

இதனால் சாம்பியன்ஸ் லீக் தொடர் கைவிடப்பட்டது. இதனால் மினி .பி.எல். தொடரை நடத்த பி.சி.சி.. முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பி.சி.சி.. தலைவர் அனுராக் தாகூர் கூறுகையில் ‘‘செப்டம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் வாரியம் மினி .பி.எல். அல்லது .பி.எல். ஓவர்சீஸ் தொடரை நடத்த இருக்கிறது. இது ஒரு குறைந்த கால தொடராக இருக்கும். இது இந்தியாவில் நடைபெறாது. அதற்குப் பதிலாக வெளிநாட்டில் இரண்டு வாரங்கள் நடைபெறும் மிகக்குறுகிய கால தொடராக இருக்கும்.

இந்த வருடத்தில் செப்டம்பர் மாதம் உள்ளூர் மண்டல கிரிக்கெட் தொடரானதுலீப் டிராபிமுடிவடைகிறது. இது முடிந்த பின்னர் மினி .பி.எல். தொடரை நடத்த உள்ளோம். இது இரண்டு வாரங்களுக்கும் குறைவான தொடராக இருக்கும். எந்த நாட்டில் போட்டியை நடத்துவது, எத்தனை அணி இடம்பெறும், எந்தெந்த வீரர்கள் பங்கேற்பார்கள், ஒளிப்பரப்பு வேலையை யாரிடம் ஒப்படைப்பது என்பது குறித்து யோசனை செய்துவருகிறோம். ஆனால், தொடரை நடத்த முடிவு செய்து விட்டோம் என்றார

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்