ஐரோப்பியக் கிண்ண கால்பந்து போட்டிகள் தொடரில் நேற்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில், 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் பெல்ஜியம் அயர்லாந்து குடியரசைத் தோற்கடித்தது. இரண்டாவது ஆட்டத்தில் ஐஸ்லாந்து – ஹங்கேரி அணிகல் மோதின இந்தப் போட்டி சமநிலையில் முடிந்தது.
மூன்றாவதாக, போர்த்துக்கல் – ஆஸ்திரியா அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் இறுதி வரை கோல் எதுவும் அடிக்கவில்லை.
போர்த்துக்கல் அணியின் முன்னணி ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்க கிடைத்த பெனால்டி ஷாட் வாய்ப்பைத் தவறவிட்டார். அவர் அடித்த பந்து கம்பியின் மீது பட்டு வெளியேறிவிட்டது.
இதனால் போர்த்துக்கல் – ஆஸ்திரியா அணிகள் இடையிலான போட்டி சமநிலையில் முடிந்தது. இதன் மூலம் போர்த்துக்கல் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்