அவுஸ்திரேலியாவை சுருட்டினார் சாமுவேல்ஸ்

552
Tri Series - Aus vs WI
@AFP

மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா ஆகிய 3 அணிகள் பங்குகொள்ளும் மேற்கிந்திய முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் 5ஆவது போட்டி நேற்று சென் கிட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் போட்டியை நடாத்தும் மேற்கிந்திய தீவுகள் அவுஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாடியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் முதலில் அவுஸ்திரேலிய அணியைத் துடுப்பாட அழைப்புவிடுத்தார்.

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலியா 265/7 (50)
உஸ்மான் கவாஜா 98
ஸ்டீவ் ஸ்மித் 74
ஜோர்ஜ் பெயிலி 55
கிரொன் பொலார்ட் 32/2
ஜேசன் ஹோல்டர் 44/2

மேற்கிந்திய தீவுகள் 266/6 (45.4)
மார்லன் சாமுவேல்ஸ் 92
ஜொன்சன் சார்ல்ஸ் 48
டெரன் ப்ராவோ 39
எடம் சம்பா 60/2

இந்தப் போட்டியில் 26 பந்துகள் மீதமிருக்க மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது. போட்டியின்  ஆட்ட நாயகனாக மார்லன் சாமுவேல்ஸ் தெரிவு செய்யப்பட்டார். இந்த முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் 6ஆவது போட்டி நாளை நடைபெறவுள்ளது. இதில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆபிரிக்கா அணிகள் மோதுகின்றன.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்