ஸ்பெயின் அணியின் வெற்றிக்கு வழி செய்தார் ஜெரார்ட் பிக்

348
Spain 1-0 Czech Republic: Euro 2016
Reuters

ஐரோப்பியக் கிண்ண கால்பந்து தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் நடப்பு சம்பியன் ஸ்பெயின் அணி, செக் குடியரசு அணியை வீழ்த்தியது.

பிரேசில் அணிக்கு ஆதரவு வழங்கும் நெய்மார்

ஐரோப்பியக் கால்பந்து தொடரில் இன்று “டி” பிரிவில் இடம்பெற்றுள்ள செக் குடியரசு, நடப்பு சம்பியனான ஸ்பெயின் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆரம்பத்தில் இருந்தே பந்துகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு இரு அணி வீரர்களும் போராடினார்கள். இருப்பினும் முதல் பாதியில் இரு தரப்பிலும் கோல்கள் அடிக்கப்படவில்லை.

இரண்டாவது பாதி ஆட்டத்திலும் தொடர்ந்து கோல் வாய்ப்பினை நழுவ விட்டனர். இந்நிலையில், 87வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் இனியஸ்டா பாஸ் செய்த

பந்தை, தலையால் முட்டி கோல் போட்டார் ஜெரார்ட் பிக். இதனால் ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றது. இதற்கு பதில் கோல் அடிக்கும் செக் குடியரசு வீரர்களின் முயற்சி பலனலிக்கவில்லை. இறுதியில் ஸ்பெயின் அணி வெற்றிபெற்றது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்