15ஆவது ஐரோப்பியக் கிண்ண கால்பந்து போட்டி நேற்று பிரான்ஸில் ஆரம்பித்தது. நேற்றைய தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடாத்தும் பிரான்ஸ் ருமேனியாவை வீழ்த்தி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு அடுத்து பிரபலம் பெற்றது ஐரோப்பிய கிண்ண கால்பந்து போட்டியாகும். இந்தப் போட்டியும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். 15ஆவது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸில் நேற்று தொடங்கியது.
இந்தப் போட்டியில் 24 நாடுகள் பங்கேற்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2ஆவது சுற்றுக்குத் தகுதிபெறும்.
நேற்றைய தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் பிரான்ஸ் – ருமேனியா (ஏ பிரிவு) அணிகள் மோதின. இதில் 2 முறை சம்பியனான பிரான்ஸ் 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
ஐரோப்பியக் கிண்ணம் இன்று பிரான்சில் ஆரம்பம்
முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. 57ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஆலிவர் கிரவுட் கோல் அடித்தார். 65ஆவது நிமிடத்தில் ருமேனியாவைச் சேர்ந்த ஸ்டான்சு பெனால்டி மூலம் இந்த கோலை அடித்து சமன் செய்ய ஆட்டம் முடிய 1 நிமிடம் இருந்த போது பிரான்ஸ் 2ஆவது கோலை அடித்து வெற்றிபெற்றது. 89ஆவது நிமிடத்தில் டிமிட்ரி பேயட் இந்த கோலை அடித்தார்.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் அல்பெனியா– சுவிட்சர்லாந்து (ஏ பிரிவு) வேல்ஸ்– சுலோவாக்கியா, இங்கிலாந்து– ரஷியா (பி பிரிவு) அணிகள் மோதுகின்றன.