அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான பழைமைவாய்ந்த டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடரில், பகலிரவு டெஸ்ட் போட்டிகளைச் சேர்க்க வேண்டாமென, இரண்டு அணிகளினதும் தலைவர்களான ஸ்டீவன் ஸ்மித், அலஸ்டெயர் குக் இருவரும் தெரிவித்துள்ளனர்.
கருத்துத் தெரிவித்திருந்த ஸ்மித், ஆஷஸ் போட்டிகளுக்குப் பகலிரவு டெஸ்ட்கள் தேவையில்லை எனத் தெரிவித்திருந்தார். அவரது கருத்தைப் பிரதிபலித்த குக், பகலிரவு டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ந்தும் நடத்துவதற்கு நாடுகள் முயல வேண்டுமெனத் தெரிவித்த போதிலும், ஆஷஸில் அவை தேவையில்லை என்ற கருத்தை வெளிப்படுத்தினார்.
இங்கிலாந்து வீசா பெற்றார் ஆமிர்
அவுஸ்திரேலிய அணிக்கெதிராக, பகலிரவு டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடுவதற்கு, தென்னாபிரிக்க அணி சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவின் இப்பருவகாலத்தில், பகலிரவு டெஸ்ட் போட்டிகள் இரண்டில், அவ்வணி விளையாடவுள்ளது. பாகிஸ்தானுக்கெதிராக, மற்றைய போட்டி அமையவுள்ளது.
இங்கிலாந்து அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளமை உறுதியாகியுள்ளதோடு, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
எனினும் குக்கும் ஸ்மித்தும், ஆஷஸ் போட்டிகளுக்குப் பார்வையாளர்கள் அதிகமாக வரும் நிலையில், பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட பகலிரவு டெஸ்ட் போட்டிகள், ஆஷஸ் போட்டிகளில் உருவாக்கப்படத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
எனினும் கருத்துத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜேம்ஸ் சதர்லான்ட், ஆஷஸ் போட்டிகளில் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் இடம்பெறுகின்றமை, இயற்கையான மாற்றமாக அமையுமெனத் தெரிவித்ததோடு, அடுத்த 18 மாதங்களில் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள ஆஷஸில், 2 போட்டிகள் பகலிரவுப் போட்டிகளாக இடம்பெறுவதற்கு வாய்ப்புகளுள்ளன என்றார்.
ஆதாரம் – விஸ்டன் இலங்கை
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்