இங்கிலாந்து வீசா பெற்றார் ஆமிர்

1005
Mohammad Amir

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான முஹமத் ஆமிருக்கு இங்கிலாந்து வீசா வழங்கியுள்ளது.

பாகிஸ்தான்  அணியின் முன்னணி  வேகப்பந்து வீச்சாளரரான  முஹமத் ஆமிர் கடந்த 2010ஆம் ஆண்டு தனது 18 வயதில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்டில் விளையாடினார். அப்போது மெட்ச் பி்க்சிங்கில் ஈடுபட்டு சிறைத்  தண்டனை அனுபவித்ததுடன் ஐந்தாண்டுகள் தடையும் பெற்றார்.

தடைக்காலம் முடிந்து மீண்டும் சர்வதேச அணியில் முஹமத் ஆமிர் இடம்பிடித்துள்ளார். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.

முதன்முறையாக தற்போது இங்கிலாந்து அணக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாட பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்து லோட்ஸ் மைதானத்தில் விளையாடும் போதுதான் மெட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார். தற்போது மீண்டும் அதே மைதானம் மூலம் டெஸ்ட் கிரிக்கட்டில் காலடி எடுத்து வைக்க இருக்கிறார்.

இங்கிலாந்து நாட்டைப் பொறுத்த வரையில் ஒருவர் சிறைக்கு  சென்றிருந்தால் அவருக்கு விசா கிடைப்பது கடினம். இதனால் பாகிஸ்தான் கிரிக்கட் சபை முஹமத் ஆமிருக்கு விசா வழங்கு உதவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது

இங்கிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் குழாம்.

இந்த வேண்டுகோளை ஏற்று முஹமத் ஆமிருக்கு இங்கிலாந்து வீசா வழங்கியுள்ளது. இந்தத் தகவலை பாகிஸ்தான் கிரிக்கட் சபை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

இதன்மூலம் சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தனது டெஸ்ட் போட்டியை மீண்டும் தொடர இருக்கிறார் முஹமத் ஆமிர்.

24 வயதுடைய இடதுகை வேகப்பந்து வீச்சாளரான முஹமத் ஆமிர் 2009ஆம் ஆண்டு இலங்கை  அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பாகிஸ்தான் அணியில் அறிமுகமானார். தற்போது வரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் பந்தை மிக அற்புதமாக ஸ்விங் செய்யும் திறமையுள்ளவர். முஹமத் ஆமிர் மிக அபாரமாகப் பந்துவீசி 29.09 என்ற பந்துவீச்சு சராசரியில் 51 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  அதில் 3 தடவை இனிங்ஸ் ஒன்றில் 5 விக்கட்டுகளைக் கைப்பற்றியுள்ளதோடு 2 தடவை இனிங்ஸ் ஒன்றில் 4 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அவர் 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் இனிங்ஸில் 6 விக்கட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி இனிங்ஸ் தோல்வி அடைந்ததால் அவரால் 2ஆவது இனிங்ஸில் பந்து வீச முடியாமல் போனது. அத்தோடு அவர் இறுதியாக விளையாடிய இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் போட்டித் தொடரின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

பஞ்சாபை பிறப்பிடமாகக் கொண்ட முஹமத் ஆமிர் பாகிஸ்தான் அணிக்காக 17 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 30 விக்கட்டுகளையும் 29 டி20 போட்டிகளில் 34 விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஆமிர் துடுப்பாட்டத்தில் பெரிதளவு பிரகாசிக்காவிட்டாலும் நியுசிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டி ஒன்றின் போது ஆட்டம் இழக்காமல் 73 ஒட்டங்களைப் பெற்று இருந்தமை அவர் ஓரளவு துடுப்பெடுத்தாடக் கூடியவர் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்