இலங்கை இங்கிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகளைக் கொண்ட இன்வெஸ்டெக் டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்றுலண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பித்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் எலஸ்டயர் குக் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தார்.
3ஆவது டெஸ்ட்டில் விளையாடும் அணி விபரம்
இலங்கை அணி
எஞ்சலொ மெதிவ்ஸ் (தலைவர்), திமுத் கருணாரத்ன, கவ்ஷால் சில்வா, குசல் மென்டிஸ், தினேஷ் சந்திமல், லஹிறு திரிமன்ன, குசல் பெரேரா, ரங்கன ஹேரத், சுரங்க லக்மால், ஷாமிந்த எறங்க, நுவான் பிரதீப்
இங்கிலாந்து அணி
எலஸ்டயர் குக் (தலைவர்), அலெக்ஸ் ஹேல்ஸ், நிக் கொம்ப்டன், ஜோ ரூட், ஜேம்ஸ் வின்ஸ், ஜொனி பெயார்ஸ்டோ, மொயின் அலி, க்றிஸ் வோக்ஸ், ஸ்டுவர்ட் ப்ரோட், ஜேம்ஸ் என்டர்சன், ஸ்டீவன் பின்
போட்டி நடுவர்கள் : ரொட் டக்கர் மற்றும் சுந்தரம் ரவி
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 279 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
முதல்நாள் போட்டியின் சுருக்கம்; இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 279/6
ஜொனி பெயார்ஸ்டோ 107*
எலஸ்டயர் குக் 85
மொயின் அலி 25
க்றிஸ் வோக்ஸ் 23*
இலங்கை அணியின் பந்துவீச்சில் நுவான் பிரதீப், சுரங்க லக்மால் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் தலா 3 விக்கட்டுகள் வீதம் கைப்பற்றினர்.
இன்றைய முதல் நாளில் இங்கிலாந்து அணி சார்பாகப் பிரகாசித்து ஆட்டம் இழக்காமல் ஆடி வரும் ஜொனி பெயார்ஸ்டோ 11 ஓட்டங்களைப் பெற்று இருந்த வேளையில் நுவான் பிரதீப் வீசிய பந்தை அவர் “மிட் விக்கட்” திசைக்கு வேகமாக சற்று உயர்த்தி அடித்தார். பிடியெடுப்பாக சென்ற பந்து அங்கு களத்தடுத்துக் கொண்டிருந்த ஷாமிந்த எரங்கவின் கைக்கு செல்ல அவர் அந்த பிடியெடுப்பை நழுவவிட்டார். அந்தப் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி ஜொனி பெயார்ஸ்டோ மிக அவதானமாக ஆடி வருகிறார். அவரது பிடியெடுப்பை எரங்க பிடித்து இருந்தால் போட்டியின் போக்கு இலங்கையின் பக்கம் மாறி இருக்கக் கூடிய வாய்ப்பு இருந்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.