போனஸ் புள்ளியுடன் வென்றது தென் ஆபிரிக்கா

479
SA defend 189 for bonus-point win
©AFP

மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்றைய போட்டியில் அவுஸ்திரேலியாவை 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா. இதன் மூலம் போனஸ் புள்ளியுடன் வெற்றி பெற்றுள்ளது.

கயானா ஆடுகளம் சுழல்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் தாஹிர், பேங்கிஸோ, ஷம்சி ஆகிய 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கிய தென் ஆபிரிக்கா அணி, நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது.  ஆரம்பத்தில் விக்கட்டுகளை குறிப்பிட இடைவெளிகளில் இழந்த தென் ஆபிரிக்கா பெஹார்டினின் நிதானமான 62 ஓட்டங்களால்  112/6 என்ற நிலையிலிருந்து 189 ஓட்டங்களுக்கு உயர்ந்தது. பெஹார்டியனின் இந்த இன்னிங்ஸ் தான் தென் ஆபிரிக்க அணியின் நேற்றைய வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்தது.

பின் 190 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது ஆட்டத்தைத் தொடர்ந்த அவுஸ்திரேலிய 34.2 ஓவர்களில் 142 ஓட்டங்களுக்கு சுருண்டது. ரபாதா 7 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளைச் சாய்த்தார். அவுஸ்திரேலிய சார்பாக பின்ச் 72 ஓட்டங்களைப் பெற்றார்.

ட்ராவிட் -கங்குலி சாதனையை முறியடித்த லம்ப், வெசல்ஸ் ஜோடி

தென் ஆபிரிக்க பந்து வீச்சாளர்களில் மிகவும் அச்சுறுத்தியவர்  தாப்ரைஸ் ஷம்சி ஆவார். இது இவரது அறிமுகப் போட்டி. ஆனால் மிகவும் அபாயகரமான ஒரு பந்துவீச்சாளர் இவர் என்பது நேற்று தெரியவந்தது. ஒவ்வொரு பந்துமே விக்கெட் வீழ்த்தும் அச்சுறுத்தலை அவுஸ்திரேலியாவுக்கு ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. அவர் 8 ஓவர்களில் 36 ஓட்டங்களுக்கு 1 விக்கெட் எடுத்தார்

நேற்றைய போட்டியில் முதல் முறையாக தென் ஆபிரிக்க அணியில் 8 வீரர்கள் வெள்ளையரல்லாதாரைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்