விராத் கொஹ்லியின் அற்புதமான துடுப்பாட்டம் என்னை பிரமிக்க வைக்கிறது என்று இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் உள்ள மாநில கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கு வசதியாக மேற்கு வங்காள கிரிக்கெட் வாரியத்தால் ‘விஷன் 2020’ என்ற நிகழ்ச்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் முன்னாள் ஜாம்பவான்களான முத்தையா முரளிதரன் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர் மேற்கு வங்காள மாநில வீரர்களுக்கு வழிகாட்டியாக செயற்பட்டு, வீரர்களை இந்திய கிரிக்கெட்டில் இடம்பிடிக்க வைக்க வேணடும் என்பதுதான்
ஆனால், வக்கார் யூனிஸ் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக செயற்பட்டதால் அவரால் வீரர்களுக்கு அறிவுரைகள் வழங்க இயலவில்லை. ஆனால், முத்தையா முரளிதரன் விவிஎஸ் லஷ்மண் உடன் சேர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.
கடந்த இரண்டு நாட்களாக ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் உள்ள சால்ட்லேக் கேம்பஸ் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது முரளிதரன் இளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆசிய நாடுகளில் முதன் முதலாக பகல்- இரவு டெஸ்ட் போட்டி
அப்போது ஒரு இளம் வீரருடன் முத்தையா முரளிதரன் உரையாடுவார். இளம் வீரரான பிரதேஷ் (வயது 18). இந்த ஐ.பி.எல். தொடரில் ஹைதராபாத் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறித்து கேள்வி கேட்டார்.
அதற்கு முத்தையா முரளிதரன் ‘‘இந்த வருடம் ஐ.பி.எல். தொடர் நினைவில் கொள்ளத்தக்க மறக்க முடியாத ஒன்று. ஒருங்கிணைந்த அணி சரியாக அமைந்தது. வோர்னர் தலைசிறந்த தலைவர் அத்தோடு சிறந்த துடுப்பாட்ட வீரரும்தான். இந்தத் தொடரில் அதிர்ஷ்டமும் எங்களுக்கு கைகொடுத்தது” என்றார்.
முஸ்தபிசுர் ரஹ்மான் குறித்து கேட்ட கேள்விக்கு ‘‘அவரைப் பற்றி என்னால் என்ன சொல்ல முடியும். அவர் சிறந்த திறமை பெற்ற பந்து வீச்சாளர். அவர் இன்னும் நல்ல நிலைக்கு வளரவேண்டும். வெளிநாட்டுத் தொடர்களில் அதிக அளவு அவர் விளையாட வேண்டும். உலகக் கிரிக்கெட்டில் அதிக திறமையுள்ளவர்” என்றார்.
விராத் கொஹ்லி குறித்து கேட்டதற்கு “துடுப்பாட்ட பிரகாசம் என்ற கனவின் நடுவில் இருக்கிறார் விராத். அவர் இந்த ஐ.பி.எல். தொடரில் மட்டுமல்ல, கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகச்சிறப்பான வகையில் விளையாடி வருகிறார். இந்தியாவிற்காகவும், ஐ.பி.எல். தொடருக்காகவும் ஓட்டங்களைக் குவித்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவரை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. இதே வழியில் அவர் செல்வார் என்று நம்புவோம்” என்றார்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்