இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு தொடர்பில் போர்ட் கவலை

689
Ford concerned about Sri Lanka's fast-bowling depth

இலங்கை அணி இங்கிலாந்து சென்று 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 1 டி20 போட்டியைக் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.

தற்போது வரை 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் அடுத்த போட்டி 9ஆம் திகதி லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பலவீனமாக இருப்பதாக இலங்கை அணியின் பயிற்சிவிப்பாளர் கிரேம் போர்ட் கூறியுள்ளார்

அவுஸ்திரேலிய அணிக்கு போனஸ் புள்ளி வெற்றி

டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் முதன்மையானவரான தம்மிக்க பிரசாத் தோற்பட்டை உபாதை காரணமாக இந்தத் தொடரில் இருந்து வெளியேறியிருந்தார். அவர் வெளியேறி சில தினங்களில் இலங்கை அணியின் இன்னுமொரு முக்கிய வேகப்பந்து வீச்சாளரான மணிக்கு 140 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் பந்துவீசும் துஸ்மந்த சமீரவும் உபாதை காரணமாக நாடு திரும்பினார்.

அத்துடன் இன்னுமொரு வேகப்பந்து வீச்சாளரான சமிந்த எரங்கவின் பந்துவீச்சுப் பாணியில் குற்றம் சாட்டப்பட்டு அவர் இன்று பந்துவீச்சு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார். ஆயினும் அவரது  பந்துவீச்சு சோதனைகள் பெறுபேறுகள் வரும் வரை அவர் சர்வதேசப் போட்டிகளில் பந்து வீசலாம் என சர்வதேச கிரிக்கட் சபை கூறியுள்ளது.

இந்த நிலையில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சைப் பலப்படுத்த வேண்டிய மிகப்பெரிய ஒரு தேவையுள்ளதாக பயிற்சியாளர் போர்ட் கூறியுள்ளார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்