தயாசிறியோடு பேசி கிட்டத்தட்ட 3 அல்லது 4 மாதங்களாகின்றன – டில்ஷான்

2135
I haven't even spoken with Hon. Minister since the Asia Cup

விளையாட்டுத்துறை அமைச்சருடன் நான் எவ்விதமான பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை.

இணையங்களில் வெளிவருவது பொய்யான செய்திகள் என இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான திலகரத்ன  டில்ஷான் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கட் சபையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தரவேற்றப்பட்டுள்ள காணொளியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவுக்கு கிடைத்த இந்த பதில் இலங்கை அணிக்கு சாதகமாகுமா?

இது தொடர்பில் அவர் அதில் கூறியதாவதுவிளையாட்டுத்துறை அமைச்சருடன் நான் பேசிய விடயம் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். உண்மையில் நான் அமைச்சர் தயாசிறியை சந்திக்கவில்லை. கிட்டத்தட்ட 3 அல்லது 4 மாதங்களுக்கு முன்னர்தான் அவரை சந்தித்தேன். அதுவும் பங்களாதேஷில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டிகளின் போதே அவரை சந்தித்தேன். அந்தநேரத்திலும் எனது கிரிக்கட் வாழ்க்கை தொடர்பில் எதுவும் பேசவில்லை.

அவருடன் நான் பேசியதாக இணையங்களில் வெளிவரும் செய்திகள் தொடர்பில் நான் கவலையடைகின்றேன்.  இணையங்களில் வெளிவரும் செய்திகள் பொய்யானவைஎன டில்ஷான் கூறியுள்ளார்.

இலங்கை அணிக்காக 327 ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாடியுள்ள திலகரத்ன டில்ஷான் 39.44 என்ற துடுப்பாட்ட சராசரியில் 10,216 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் அவரது ஆகக் கூடுதலான ஓட்டம், ஆட்டம் இழக்காமல் பெற்ற 161 ஓட்டங்களாகும். அத்தோடு  டில்ஷான் தனது  ஒருநாள் சர்வதேச கிரிக்கட் வாழ்க்கையில் 22 சதங்கள் மற்றும் 47 அரைச் சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்