இலங்கை இங்கிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகளைக் கொண்ட இன்வெஸ்டெக் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று டர்ஹம் செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் ஆரம்பித்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் எலஸ்டயர் குக் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தார்.
மஹேலவின் பிறந்த நாள் சிறப்புக் கண்ணோட்டம்
2ஆவது டெஸ்ட்டில் விளையாடும் அணி விபரம்
இலங்கை அணி
எஞ்சலொ மெதிவ்ஸ் (தலைவர்), திமுத் கருணாரத்ன, கவ்ஷால் சில்வா, குசல் மென்டிஸ், தினேஷ் சந்திமல், லஹிறு திரிமன்ன, மிலிந்த சிறிவர்தன, ரங்கன ஹேரத், சுரங்க லக்மால், ஷாமிந்த எறங்க, நுவான் பிரதீப்
இங்கிலாந்து அணி
எலஸ்டயர் குக் (தலைவர்), அலெக்ஸ் ஹேல்ஸ், நிக் கொம்ப்டன், ஜோ ரூட், ஜேம்ஸ் வின்ஸ், ஜொனி பெயார்ஸ்டோ, மொயின் அலி, க்றிஸ் வோக்ஸ், ஸ்டுவர்ட் ப்ரோட், ஜேம்ஸ் என்டர்சன், ஸ்டீவன் பின்
போட்டி நடுவர்கள் : அலீம் டார் மற்றும் சுந்தரம் ரவி
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 310 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
முதல் நாள் போட்டியின் சுருக்கம்; இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 310/6
அலெக்ஸ் ஹேல்ஸ் 83
ஜோ ரூட் 80
ஜொனி பெயார்ஸ்டோ 48
மொயின் அலி 28*
க்றிஸ் வோக்ஸ் 08*
இலங்கை அணியின் பந்துவீச்சில் நுவான் பிரதீப் 3 விக்கட்டுகளையும், மிலிந்த சிறிவர்தன 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.
Score Card
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்