காலிறுதியில் ப்ளூ ஸ்டாரை வீழ்த்தியது சவுண்டர்ஸ்

429

கார்கில்ஸ் புட் சிட்டி FA கிண்ணத்தின் இன்னுமொரு காலிறுதிப் போட்டி இன்று பிற்பகல் கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சவுண்டர்ஸ் கால்பந்தாட்டக் கழகம் ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து விளையாடியது.

மழை காரணமாக 35 நிமிடங்கள் தாமதித்து ஆரம்பித்த இந்தப் போட்டியின் முதல் நிமிடம் தொடக்கம் சவுண்டர்ஸ் கால்பந்தாட்டக் கழகம் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தியது. ஆனால் ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் கோல் காப்பாளர் மஞ்சுல பெர்னாண்டோ தனது பொறுப்பை அற்புதாமாக நிறைவேற்றி சவுண்டர்ஸ் கால்பந்தாட்டக் கழகம் கோல் பெறும் வாய்ப்புகளை நிறுத்தினார். இதனால் முதல்பாதி முடிவில் இரண்டு அணிகளும் கோல்களைப் பெறாத நிலையில் காணப்பட்டது.

அரையிறுதிப் போட்டிக்கு நுழைந்தது இராணுவ அணி

பின் போட்டியின் இரண்டாவது பாதி ஆரம்பமானது. அதிலும் முதல் பாதி போன்றே சவுண்டர்ஸ் கால்பந்தாட்டக் கழகம் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினாலும் ப்ளூ ஸ்டார் விளையட்டுக் கழகத்தின் கோல் காப்பாளர் மஞ்சுல பெர்னாண்டோ மீண்டும் தனது  பொறுப்பை அற்புதாமாக நிறைவேற்றி சவுண்டர்ஸ் கால்பந்தாட்டக் கழகம் கோல் பெறும் வாய்ப்புகளை நிறுத்தினார். ஆனால் போட்டியின் 65ஆவது நிமிடத்தில் சவுண்டர்ஸ் கால்பந்தாட்டக் கழக வீரர் அப்துல் முஹமதால் 1ஆவது கோல் போடப்பட்டது. அதன் பின் போட்டி இறுதி நிமிடம் வரை விறுவிறுப்பாக சென்றாலும் போட்டியின் முழு ஆதிக்கம் சவுண்டர்ஸ் கால்பந்தாட்டக் கழகத்தினிடமே காணப்பட்டது. இதன் மூலம் இறுதியில் இந்தப் போட்டியை 1க்கு 0 என்ற ரீதியில் சவுண்டர்ஸ் கால்பந்தாட்டக் கழகம் வெற்றிபெற்று கார்கில்ஸ் புட் சிட்டி FA கிண்ணத்தின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதன்படி சவுண்டர்ஸ் கால்பந்தாட்டக் கழகம் எதிர்வரும் சனிக்கிழமை (28) ரினோவ்ன் விளையாட்டுக் கழகத்தை அரையிறுதிப் போட்டியில் இன்று போட்டி நடைபெற்ற அதே ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் சந்திக்கவுள்ளது.

இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக போட்டியின் வெற்றி கோலைப் போட்ட சவுண்டர்ஸ் கால்பந்தாட்டக் கழக வீரர் அப்துல் முஹமத் தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்