ஒரு இனிங்ஸில் 9 விக்கட்டுகளை வீழ்த்தினார் வோக்ஸ்

316
Chris Woakes

இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் விளையாடமாட்டார். அவருக்குப் பதிலாக க்றிஸ் வோக்ஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இங்கிலாந்தின் உள்ளூரில் வார்விக்ஷயர் அணிக்கு விளையாடி வரும் க்றிஸ் வோக்ஸ் டர்ஹாம் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பர்மிங்ஹாம் எட்க்பாஸ்டன் மைதானத்தில்  ஆரம்பமான இங்கிலாந்தின் உள்ளூர் அணிகளான வார்விக்ஷயர் மற்றும் டர்ஹாம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய வார்விக்ஷயர் அணி தமது முதல் இனிங்ஸில் 313 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அதிகூடிய ஓட்டமாக என்ட்று உமீத் 101 ஓட்டங்களைப் பெற்றார்.  பதிலுக்கு தமது முதல் இனிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடிய டர்ஹாம்  அணி 190 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதன் போது வார்விக்ஷயர் அணியின் பந்துவீச்சில் க்றிஸ் வோக்ஸ் 20.4 ஓவர்கள் பந்து வீசி 6 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 36 ஓட்டங்களைக் கொடுத்து 9 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்