வரலாற்றில் இன்று : மே மாதம் 21

720
On This Day -May-21

1997ஆம் ஆண்டு – சயீத் அன்வரின் 194 ஓட்டங்கள்

பெப்சி இன்டிபென்டென்ஸ் கிண்ணப் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சயீத் அன்வர் இந்தியாவுக்கு எதிராக 194 ஓட்டங்களைப் பெற்றார். நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுதாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 327 ஓட்டங்களைக் குவித்தது. இதில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சயீத் அன்வர் 206 நிமிடங்கள் களத்தில் துடுப்பெடுத்தாடி 146 பந்துகளுக்கு முகங்கொடுத்து 22 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை விளாசி 194 ஓட்டங்களைப் பெற்றார். இவரது இந்த விளாசுதல் மூலம் பாகிஸ்தான் அணி இந்திய அணியை 35 ஓட்டங்களால் தோற்கடித்தது.

வரலாற்றில் இன்று : மே மாதம் 20

1993 ஆம் ஆண்டு – ரொபின் ஸ்மித்தின் 167*

டெக்சகொ கிண்ணப் போட்டியின் போது இங்கிலாந்து அணியின் 3ஆம் இலக்க துடுப்பாட்ட வீரரான ரொபின் ஸ்மித் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் 163 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 167 ஓட்டங்களைப் பெற்றார். ஆனாலும் இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கட்டுகளால் வெற்றிபெற்றிருந்தது.

வரலாற்றில் இன்று : மே மாதம் 19

மே மாதம் 21ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1890 ஹாரி ஸ்மித் (இங்கிலாந்து)
  • 1893 ஆர்தர் கர் (இங்கிலாந்து)
  • 1906 கீத் ரிக் (அவுஸ்திரேலியா)
  • 1929 போல்வின்ஸ்லோ (தென் ஆபிரிக்கா)
  • 1930 கிட் ரேமண்ட் (அவுஸ்திரேலியா)
  • 1955 லியாகத் அலி (பாகிஸ்தான்)
  • 1958 மொன்டே லிஞ்ச் (இங்கிலாந்து)
  • 1969 ஜகத் நந்தகுமார் (இலங்கை)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்