2011ஆம் ஆண்டு – குறைந்த ஓட்டங்களையுடைய டெஸ்ட் போட்டி
2011ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளின் கயான விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 40 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது. இப்போட்டியில் இரு அணிகளும் குறைவான ஓட்டங்களையே பெற்று இருந்தன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இனிங்சஸில் 226 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி தமது முதல் இனிங்ஸில் 160 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதன் பிறகு தமது இரண்டாவது இனிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 152 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தான் அணிக்கு 219 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது. ஆனால் பாகிஸ்தான் அணி டெரன் சமி மற்றும் ரவி ராம்புல் ஆகியோரின் அபாரமான பந்துவீச்சை முகங்கொடுக்க முடியாமல் 178 ஓட்டங்களில் சுருண்டது.
வரலாற்றில் நேற்றைய நாள் : மே மாதம் 14
மே மாதம் 15ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1875 ஜோசப் வைன் (இங்கிலாந்து)
- 1875 க்லெம் வில்சன் (இங்கிலாந்து)
- 1917 ரொன் சகர்ஸ் (அவுஸ்திரேலியா)
- 1919 சார்ல்ஸ் பால்மர் (இங்கிலாந்து)
- 1929 ஜாக் ப்லவெல்(இங்கிலாந்து)
- 1935 டெட் டெஸ்டர் (இங்கிலாந்து)
- 1941 பி.சி. குரே (இலங்கை)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்