உபாதைக்குள்ளானார் டேவிட் விலே

2845
David Willey

கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்று முடிவடைந்த டி20 உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து அணியின் முக்கிய  பந்துவீச்சாளராக செயற்பட்டிருந்த டேவிட் விலே உபாதைக்குள்ளாகியுள்ளார்.

இங்கிலாந்தின் உள்ளூர் கவுண்டி போட்டிகளில் யோர்க்சயார் அணிக்காக விளையாடி வரும் டேவிட் விலே ஹெடிங்லி மைதானத்தில் இடம்பெற்ற சரே அணிக்கு எதிரான போட்டியின் போதே அவரின் வயிற்றுப் பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளது.

இவரின் உபாதையைப் பரிசோதித்த யோர்க்சயார் அணியின் மருத்துவக் குழு இவருக்கு 6 வாரங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதனால் ஜூன் மாதம் 21ஆம் திகதி ஆரம்பிக்கும் இலங்கை அணியுடனான 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இவர் பங்குபற்றுவதற்கான வாய்ப்புகள் மிக அரிதாகக் காணப்படுகிறது.

விராத் கொஹ்ளியை வீழ்த்தினார் ரோஹித் ஷர்மா

நடந்து முடிந்த டி20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீசி 4 ஒவர்களில் 26 ஓட்டங்களைக் கொடுத்து டில்ஷான் மற்றும் சிறிவர்த்தன ஆகியோரின் முக்கிய விக்கட்டுகளை ஆரம்பத்திலேயே வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு விலே துணை புரிந்திருந்தார். அதுமட்டுமில்லாமல்  டி20 உலகக் கிண்ணத்  தொடரில் மொத்தமாக 10 விக்கட்டுகளைக் கைப்பற்றி இங்கிலாந்து அணி சார்பாக அதிக விக்கட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றிருந்தமை ஒரு முக்கிய அம்சமாகும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்