இலங்கை கிரிக்கட் அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாட நாளை மே மாதம் 4ஆம் திகதி இங்கிலாந்து நோக்கிச் செல்லவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இம்மாதம் 19ஆம் திகதி லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளது. அதற்கு 8-10ஆம் திகதி வரை இங்கிலாந்து உள்ளூர் அணியான எசெக்ஸ் அணியோடும் 13-15ஆம் திகதி வரை லீசெஸ்டர் அணியோடும் இலங்கை அணி 3 நாள் பயிற்சிப் போட்டியில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இலங்கை டெஸ்ட் அணியில் 3ஆம் இலக்கத் துடுப்பாட்ட இடம் விக்கட் காப்பாளராக, 17 பேர் கொண்ட குழாமில் இணைக்கப்பட்டுள்ள நிரோஷன் திக்வெல்லவிற்கு அல்லது இளம் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸிற்கு வழங்கப்படலாம் என இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் எஞ்சலொ மெதிவ்ஸ் கூறியுள்ளார். மேலும் கூறுகையில் “நாம் ஒரு நிலையான ஒரு அணியைத் தெரிவு செய்து நிரந்தரமாக வீரர்களை நியமித்து அதன்படி விளையாடுவோம், தற்போது வரையில் திமுத் கருணாரத்ன மற்றும் கவ்ஷல் சில்வா ஆகியோரை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக செயற்படுத்த நினைத்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.