இன்னுமொரு நாள், இன்னுமொரு உபாதை பூனே அணிக்கு

3009
Steve Smith

இந்திய கிரிக்கட் அணியின்  தலைவர் மஹேந்திர சிங் டோனி தலைமையிலான றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் யாரும் எதிர்பாராத அளவிற்கு மோசமான தோல்விகளைப் பெற்றுள்ளது.

விளையாடிய 8 போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வியடைந்து வெறுமனே 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் பூனே அணி எஞ்சியுள்ள  போட்டிகளில் பெரும்பாலும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணி உபாதைகள் நிறைந்த அணியாக மாறியுள்ளது. ஏற்கனவே சுப்பர்ஜையன்ட்ஸ்அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரர்களான கெவின் பீட்டர்சன், பெப் டுப்லசிஸ் மற்றும் சகலதுறை வீரர் மிச்சல் மார்ஷ் ஆகியோர் உபாதை காரணமாக .பி.எல் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில் கடந்த குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பூனே அணி சார்பாக 54 பந்துகளில் 104 ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலியா அணியின் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான ஸ்டீவ் ஸ்மித்தும் மணிக்கட்டில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இவ்வருட .பி.எல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். ஏற்கனவே பல தோல்விகளை சந்தித்து திணறிக் கொண்டிருக்கும்  றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணிக்கு இது ஒரு பாரிய தலையிடியாக  இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மேலும் கிரிக்கட் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்