உள்ளூர் T20 லீக்கில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக வலம்வரும் அஞ்சலோ பெரேரா

SLC Major Club T20 Tournament 2020/21

202

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும், 26 முதல்தர கழகங்கள் பங்குபற்றுகின்ற மேஜர் T20 லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது வாரத்துக்காக இன்று (09) நடைபெற்ற போட்டிகளில் NCC, முவர்ஸ் கிரிக்கெட் கழகம், பாணந்துறை விளையாட்டுக் கழகம், பதுரெலிய கிரிக்கெட் கழகம், SSC, BRC, ப்ளூம்பீல்ட் மற்றும் சரசென்ஸ் ஆகிய கழங்கள் வெற்றிகளைப் பதிவு செய்திருந்தன.

இதில் B பிரிவில் இடம்பெற்றுள்ள NCC கழகம், இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி தொடர்ச்சியாக நான்காவது வெற்றியைப் பதிவுசெய்ய, C பிரிவில் முதலிடத்தில் உள்ள ராகம கிரிக்கெட் கழகம், பாணந்துறை விளையாட்டுக் கழகத்துக்கு எதிராக அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது.

மேஜர் T20 லீக்கில்துடுப்பாட்டத்தில் பிரகாசித்த மினோத், அஷான் மற்றும் அஞ்சலோ பெரேரா

மறுபுறத்தில் இதுவரை நடைபெற்ற போட்டிகள் முடிவில் அதிக ஓட்டங்களைக் குவித்த (4 போட்டிகள், 151 ஓட்டங்கள்) வீரராக வலம்வருகின்ற NCC கழகத்தின் தலைவரான அஞ்சலோ பெரேரா, விமானப்படை அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் 45 ஓட்டங்களை எடுத்து அசத்தினார்

இந்தநிலையில், சிலாபம் மேரியன்ஸ் கழகத்துக்கு எதிரான போட்டியில் முவர்ஸ் விளையாட்டுக் கழகத்துக்காக விளையாடிய இலங்கை அணியின் அனுபவ வீரர்களில் ஒருவரான 34 வயதுடைய மஹேல உடவத்த அரைச்சதம் அடித்து அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்

NCC கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

  • (பி.சரா ஓவல் மைதானம்)

NCC கழகம் – 170/5 (20) – அஞ்சலோ பெரேரா 45, சஹன் ஆரச்சிகே 44*, சதுரங்க டி சில்வா 41, லஹிரு உதார 23, சன்ஜய ரணவீர 2/21

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 90/10 (16.4) – சமீர டி சொய்ஸா 25, திவங்க கெகுலாவலகே 2/04, சஹன் ஆரச்சிகே 2/17, அஷேன் டேனியல் 2/20

முடிவு – NCC கழகம் 80 ஓட்டங்களால் வெற்றி

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் முவர்ஸ் விளையாட்டுக் கழகம்

  • (கோல்ட்ஸ் கழக மைதானம்)

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 96/10 (20) – புலின தரங்க 36, ரனித லியனாரச்சி 4/27, திலேஷ் குணரட்ன 3/12, அதீஷ திலன்ஞன 2/14

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 97/3 (14.2) – மஹேல உடவத்த 68*, அவிந்து தீக்ஷன 2/23

முடிவு – முவர்ஸ் விளையாட்டுக் கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றி 

மேஜர் T-20 லீக்கில் லஹிரு உதார அரைச்சதம்: 5 விக்கெட்டுக்களை எடுத்த ரொஸ்கோ

பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

  • (NCC மைதானம்)

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 130/7 (20) – நிமேஷ் விமுக்தி 33*, அருண தர்மசேன 22, ஜானக சம்பத் 2/08, அமில அபோன்சோ 2/19, ஷான் ஜயரட்ன 2/35

ராகம கிரிக்கெட் கழகம் – 88/10 (16.2) – ஷான் ஜயரட்ன 29, சதுர பீரிஸ் 2/12, சனுக்க மதுஷான் 2/14

முடிவு – பாணந்துறை விளையாட்டுக் கழகம் 42 ஓட்டங்களால் வெற்றி

பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

  • (SSC மைதானம்)

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 156/8 (20) – கமிந்து கனிஷ் 38*, யசோதா லங்கா 35, திலகரட்ன சம்பத் 23, நிஸல தாரக 2/26, ரொஷேன் பெர்னாண்டோ 2/36

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 108/10 (18.5) – டில்ஷான் முனவீர 27, புத்திக சன்ஜீவ 3/15, நிமன்த மதுஷங்க 3/26, அலங்கார அசங்க டி சில்வா 2/25

முடிவு – பதுரெலிய கிரிக்கெட் கழகம் 48 ஓட்டங்களால் வெற்றி

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் SSC கழகம்

  • (கோல்ட்ஸ் கழக மைதானம்)

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 1276 (20) – ரவீந்த்ர கருணாரத்ன 56, ஹிமேஷ் ராமநாயக்க 3/16, ஜெப்ரி வெண்டர்சே 2/21

SSC கழகம் – 128/3 (14.5) – நுவனிந்து பெர்னாண்டோ 39, சரித் அசலங்க 37*, நிபுன் தனஞ்சய 28

முடிவு – SSC கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றி 

இலங்கை டெஸ்ட் அணியில் இளம் வீரர் பெதும் நிஸ்ஸங்க

BRC கழகம் எதிர் கண்டி சுங்க விளையாட்டுக் கழகம்

  • (SSC மைதானம்)

BRC கழகம் – 169/7 (20) – சனுக்க துலாஜ் 55, அநுக் பெர்னாண்டோ 46*, லியோ ப்ரான்சிஸ்கோ 26, ஷெஹான் வீரசிங்ஹ 2/33, இசித விஜேசுந்தர 2/52

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 130/9 (20) – ஷெஹான் வீரசிங்ஹ 45, விஷ் விஜேரட்ன 39, சச்சின்த பீரிஸ் 3/28, சமீர திஸாநாயக்க 2/16

முடிவு – BRC கழகம் 39 ஓட்டங்களால் வெற்றி

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் எதிர் ஏஸ் கெபிடல் கிரிக்கெட் கழகம் 

  • (பி.சரா ஓவல் மைதானம்)

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 127/6 (20) – டில்ஹான் குரே 73, பசிந்து மாதவ 3/07, அதீஷ நாணயக்கார 2/29

ஏஸ் கெபிடல் கிரிக்கெட் கழகம் – 88/8 (20) – சஸ்ரிக்க புஸ்ஸேகொல்ல 23, நவோத்ய இமேஷ் 20, மிஷேன் சில்வா 2/05, கயான் சிறிசோம 2/05

முடிவு – ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் 39 ஓட்டங்களால் வெற்றி 

மேஜர் T20 லீக்கில் பொலிஸ் கழகத்துக்கு அமர்க்கள வெற்றி

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம்

  • (NCC கழக மைதானம்)

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 161/5 (20) – ஷான் துமிந்து 62, சரித்த குமாரசிங்க 35

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 150/8 (20) – சச்சித்த ஜயதிலக்க 43*, சமீன் கந்தனேராரச்சி 42, ஹஷேன் ராமநாயக்க 3/26

முடிவு – சரசென்ஸ் கிரிக்கெட் கழகம் 11 ஓட்டங்களால் வெற்றி

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<