கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆரம்பமாகும் தேசிய மெய்வல்லுனர் போட்டி

99th National Athletics Championship - 2021

358

தெரிவுசெய்யப்பட்ட வீரர்களின் பங்குபற்றலுடன் 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான விண்ணப்பம் கோரல்

முன்னதாக இந்தப் போட்டிகளை 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. 

எனினும், நாட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இரவு முதல் மீண்டும் பயணக் கட்டுப்பாடு நடைமுறைக்கு வரவுள்ளதால் தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் முதல் கட்டப் போட்டிகளை வெள்ளிக்கிழமை நடத்த இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.  

எனவே, போட்டிகள் அனைத்தும் காலை 7.15க்கு ஆர்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 100 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 3,000 மீட்டர் தடைதாண்டல் (பெண்கள்), நீளம் பாய்தல் (ஆண்கள்), ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் மாத்திரம் அன்றைய தினம் நடைபெறவுள்ளது.   

ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றுகின்ற வாய்ப்பை பெறுவதற்கான இறுதி தகுதிகாண் போட்டியாக இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் அமையவுள்ளது.

இதனால், தேசிய குழாம்களில் உள்ள முன்னணி வீரர்களுக்கு மாத்திரம் இந்தப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய சாதனையை முறியடித்த யுபுன் அபேகோன்

எனவே, 100, 400 மீட்டர் ஓட்டப் போட்டிகளுக்காக தலா 16 வீரர்களும் (இருபாலாரும்), பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டிக்காக 8 வீராங்கனைகளும், பெண்களுக்கான 3,000 மீட்டர் தடைதாண்டல், ஆண்களுக்கான நீளம் பாய்தல், ஈட்டி எறிதல் (இருபாலாரும்) உள்ளிட்ட போட்டிக்ளுக்காக தலா 12 வீரர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்

இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை மே மாதம் 20ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கொழும்பு சுககதாச விளையாட்டரங்கில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

எனினும், நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை நான்கு கட்டங்களாக ஒவ்வொரு வார இறுதியிலும் நடத்துவவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் தீர்மானித்திருந்தது

உயரம் பாய்தலில் தெற்காசிய சாதனையை முறியடித்தார் உஷான் திவங்க

இதன்படி, அரசாங்கத்தின் முடிவுகளுக்கு அமைய இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது, 3ஆவது மற்றும் 4ஆவது கட்டப் போட்டிகள் நடைபெறும் தினங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என இலங்கை மெய்வல்லுனர் சங்கம் அறிவித்துள்ளது

இதேவேளை, சுகாதார வழிகாட்டலின் கீழ் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள முதலாவது கட்டப் போட்டிகளுக்கு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மாத்திரம் மைதானத்திற்குள் நுழைவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

 மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க…