Home Tamil 87ஆவது புனிதர்களின் சமர் சமநிலையானது; கிண்ணம் தொடர்ந்து புனித பேதுரு வசம்

87ஆவது புனிதர்களின் சமர் சமநிலையானது; கிண்ணம் தொடர்ந்து புனித பேதுரு வசம்

87th Battle of the Saints Cricket Encounter

187

புனித பேதுரு கல்லூரி மற்றும் புனித ஜோசப் கல்லூரிக்கு இடையில் SSC மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (14) நிறைவடைந்த 87ஆவது புனிதர்களின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டி சமநிலை பெற்றது. இதனால் புனித பேதுரு கல்லூரி கிண்ணத்தை தக்கவைத்துக் கொண்டது.

புனித ஜோசப் கல்லூரி அணி தனது முதல் இன்னிங்ஸில் 60 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 261 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பதிலெடுத்து ஆடிய புனித பேதுரு வீரர்கள் 138 ஓட்டங்களுக்கு சுருண்டனர். இதனால் பலோ ஓன் செய்ய வேண்டி ஏற்பட்ட புனித பேதுரு கல்லூரி இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவின்போது (போட்டி நிறைவின்போது) 82 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

WATCH – கொழும்பு அணிக்காக சிக்ஸர்களால் மிரட்டிய சீகுகே பிரசன்ன!

ஈரலிப்பான மைதானம் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதித்து காலை 10.30 மணிக்கே ஆரம்பமானது. முதல் நாள் ஆட்டமும் கடும் மழையால் பிற்பகல் 2.00 மணிக்கே முடிந்தது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நிறைவின்போது புனித ஜோசப் கல்லூரி 6 விக்கெட்டுகளை இழந்து 233 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அந்தக் கல்லூரி இரண்டாவது நாள் ஆட்டத்தை ஆரம்பித்து மேலும் 28 ஓட்டங்களை தனது மொத்த ஓட்டத்துடன் சேர்த்துக்கொண்டது. ஹிரான் ஜயசூரிய அரைச் சதத்தை பெற்றார்.

பின் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த புனித பேதுரு அணி தொடக்கத்திலேயே விஷேன் ஹலம்பகேவின் விக்கெட்டை இழந்ததால் அவதானத்துடனேயே ஆடியது. சுழல்பந்துக்கு சாதகமாக இருந்த ஆடுகளத்தில் புனித ஜோசப் அணி சுழல் வீரர்கள் அபாரமாக செயற்பட, ஒரு முனையில் ஆரம்ப வீரர் ஷெனால் பொதேஜு நிலைத்திருக்க மறுமுனை விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

T20 உலகக் கிண்ண தொடர் நாயகனுக்கு ICC விருது

புனித பேதுரு கல்லூரி ஒரு கட்டத்தில் 119 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், எஞ்சிய ஆறு விக்கெட்டுகளையும் வெறுமனே 19 ஓட்டங்களுக்கு பறிகொத்தது. அவ்வணியின் துடுப்பாட்ட வரிசையில் பொதேஜு சிறப்பாக செயற்பட்டு 149 பந்துகளில் 4 பௌண்டரிகளுடன் 62 ஓட்டங்களை பெற்றார். பொதேஜு தவிர, வேறு எந்த வீரரும் 20 ஓட்டங்களைக் கூடு எட்டவில்லை. ஓப்-ஸ்பின் சுழல் ஜோடியான செனுக்க டி சில்வா மற்றும் லஹிரு அமரசேகர தலா மூன்று விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.

டி சில்வா சிறப்பாக பந்து வீசி 12 ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோன்று, அமரசேகர 20.3 ஓவர்களில் 4 ஓட்டங்களை கொடுத்து மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார். யெனுல தேவ்துச மற்றும் யசித்த ரூபசிங்க அவர்களுக்கு உதவும் வகையில் சிறப்பாக பந்துவீசி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

ஜப்னா கிங்ஸின் அடுத்த போட்டிகளில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு

ஆட்டத்தின் கடைசி பாகம் மாத்திரம் இருக்கும்போது புனித ஜோசப் அணி புனித பேதுரு கல்லூரியை பலோ ஓன் செய்ய வைத்தது. இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த புனித பேதுரு முதல் பந்திலேயே ஹலம்பகேவின் விக்கெட்டை பறிகொடுத்தது.

எவ்வாறாயினும், பொதேஜு மற்றும் முதல் வரிசை வீரர் லஹிரு தவட்டகே நிதானமாக ஆடி இரண்டாவது விக்கெட்டுக்கு 43 ஓட்டங்களை பகிர்ந்கொண்டனர். பொதேஜு 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின், தவட்டகே, அணித்தலைவர் நிபுனக்க பொன்சேகாவுடன் இணைந்தார். இருவரும் 3ஆவது விக்கெட்டுக்கு பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 39 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். போட்டியின் கடைசி மணி நேரத்தில் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இதன்மூலம் புனித பேதுரு கல்லூரி மவுரிஸ் லே கொக் சவால் கிண்ணத்தை தக்கவைத்துக் கொண்டது. அந்த அணி இந்த கிண்ணத்தை 2016 இல் கடைசியாக வென்றிருந்தது.

இந்த இரு அணிகளும் இதே மைதானத்தில் வரும் வியாழக்கிழமை 47ஆவது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

வீரர்களுக்கான விருதுகள்

  • சிறந்த களத்தடுப்பு – ஷெனால் பொதேஜு (பு.பே.க.)
  • சிறந்த பந்துவீச்சாளர் – ஷானுக்க டி சில்வா (பு.ஜோ.க.)
  • சிறந்த துடுப்பாட்ட வீரர் – ஷெனால் பொதேஜு (பு.பே.க.)
  • சிறந்த சகலதுறை வீரர் – யெசித்த ரூபசிங்க (பு.ஜோ.க.)
  • ஆட்ட நாயகன் – ஷெரான் பொன்சேகா (பு.ஜோ.க.)


Result

Match drawn

St. Joseph’s College
261/7 (60)

St. Peter’s College
138/10 (56.3) & 82/2 (22)

Batsmen R B 4s 6s SR
Sheran Fonseka lbw b Chamelka De SIlva 52 142 0 0 36.62
Yesith Rupasinghe lbw b Niman Umesh 57 88 0 0 64.77
Hiran Jaysundara not out 53 98 0 0 54.08
Mithira Thenura b Shelon Rodrigo 22 18 0 0 122.22
Keneth Liyanage st b Niman Umesh 12 24 0 0 50.00
Hirun Kapurubandara c & b Niman Umesh 4 14 0 0 28.57
Shenuka De Silva c & b Shelon Rodrigo 21 16 0 0 131.25
Sahan Dabare run out () 8 13 0 0 61.54
Deshan Seneviratne not out 14 9 0 0 155.56


Extras 18 (b 4 , lb 4 , nb 10, w 0, pen 0)
Total 261/7 (60 Overs, RR: 4.35)
Bowling O M R W Econ
Danal Hemananda 12 0 60 0 5.00
Chamelka De SIlva 9 0 32 1 3.56
Vinuda Liyanage 5 0 27 0 5.40
Niman Umesh 16 0 56 3 3.50
Lashane Rodrigo 9 0 48 2 5.33
Minol Silva 9 0 30 0 3.33
Batsmen R B 4s 6s SR
Shenal Boteju lbw b Shenuka De Silva 62 149 0 0 41.61
Vishen Halambage b Mithira Thenura 5 13 0 0 38.46
Lahiru Dewatage c & b 12 18 0 0 66.67
Nimuthu Gunawardene c & b Hiran Jaysundara 15 27 0 0 55.56
Nipunaka Fonseka c Deshan Seneviratne b Sheran Fonseka 19 56 0 0 33.93
Vinuda Liyanage b Shenuka De Silva 7 26 0 0 26.92
Danal Hemananda st b Lahiru Amarasekara 1 2 0 0 50.00
Niman Umesh b Lahiru Amarasekara 12 32 0 0 37.50
Shelon Rodrigo st Sheran Fonseka b Shenuka De Silva 0 8 0 0 0.00
Monil Silva b Lahiru Amarasekara 0 4 0 0 0.00
Chamelka De SIlva not out 0 4 0 0 0.00


Extras 5 (b 0 , lb 0 , nb 3, w 2, pen 0)
Total 138/10 (56.3 Overs, RR: 2.44)
Bowling O M R W Econ
Mithira Thenura 5 0 25 1 5.00
Deshan Seneviratne 4 1 14 1 3.50
Yenula Dewthusa 8 0 25 1 3.12
Lahiru Amarasekara 20.3 5 40 3 1.97
Yesith Rupasinghe 7 3 8 1 1.14
Shenuka De Silva 12 1 25 3 2.08


Batsmen R B 4s 6s SR
Shenal Boteju c Sahan Dabare b Yesith Rupasinghe 23 35 0 0 65.71
Vishen Halambage c Dinal Anuradha b Shenuka De Silva 0 1 0 0 0.00
Lahiru Dewatage not out 50 76 0 0 65.79
Nipunaka Fonseka not out 4 23 0 0 17.39


Extras 5 (b 0 , lb 0 , nb 5, w 0, pen 0)
Total 82/2 (22 Overs, RR: 3.73)
Bowling O M R W Econ
Shenuka De Silva 7 0 21 1 3.00
Yenula Dewthusa 3 1 13 0 4.33
Yesith Rupasinghe 6 2 19 1 3.17
Lahiru Amarasekara 3 1 6 0 2.00
Deshan Seneviratne 2 0 12 0 6.00
Mithira Thenura 1 0 9 0 9.00