கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் கொழும்பு புனித பேதுரு கல்லூரி ஆகிய அணிகளுக்கு இடையிலான புனிதர்கள் சமர் கிரிக்கெட் பெரும் போட்டி 85 ஆவது முறையாக இன்று (1) கொழும்பு P. சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமாகியது.
இரண்டு நாட்கள் கொண்டதாக இடம்பெறும் இந்த மபெரும் பெரும் கிரிக்கெட் போட்டியின் இன்றைய முதல் நாள் ஆட்ட நிறைவில் கொழும்பு புனித ஜோசப் கல்லூரி அணி துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் சிறப்பாக செயற்பட்டு முதல் நாள் ஆதிக்கத்தை தமதாக்கியுள்ளது.
>>அதிரடி மாற்றங்களுடன் தென்னாபிரிக்காவை ஒருநாள் தொடரில் சந்திக்கும் இலங்கை
முன்னதாக போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு புனித ஜோசப் கல்லூரியின் அணித்தலைவர் அஷேன் டேனியல் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை புனித பேதுரு கல்லூரிக்காக வழங்கினார்.
இதன்படி பலத்த எதிர்பார்ப்புகளுடன், புனிதர்களின் சமரின் நடப்பு சம்பியனாக இருக்கும் புனித பேதுரு கல்லூரி அணி போட்டியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது.
முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த புனித பேதுரு கல்லூரி அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான தினித் அஞ்சுலவும், முன்வரிசை துடுப்பாட்ட வீரரான சந்துஷ் குணத்திலக்கவும் சிறப்பான முறையில் ஓட்டங்கள் குவித்து பெறுமதி சேர்த்தனர். இதில், சந்துஷ் குணத்திலக்க அரைச்சதம் ஒன்றினை தாண்டி 102 பந்துகளில் 72 ஓட்டங்களை குவிக்க, தினித் அஞ்சுல 41 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
இந்த இரு வீரர்களைத் தவிர ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் புனித பேதுரு கல்லூரிக்காக ஜொலிக்க தவறினர். இதனால், 60 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த புனித பேதுரு கல்லூரி அணி 219 ஓட்டங்களை முதல் இன்னிங்ஸில் குவித்துக் கொண்டது.
Photos: St. Joseph’s College vs St. Peter’s College | 85th Battle of the Saints – Day 1
புனித ஜோசப் கல்லூரி அணியின் பந்துவீச்சில் அதன் அணித்தலைவர் அஷேன் டேனியல் 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை சாய்க்க, லக்ஷான் கமகே மற்றும் ஷாலிந்த செனவிரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த புனித ஜோசப் கல்லூரி அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களம் வந்த ஷெவோன் பொன்சேக்கா மற்றும் ஜொஹான்னே டி சில்வா ஜோடி நல்ல ஆரம்பத்தை தந்தது.
இதில் ஷெவோன் பொன்சேக்கா 4 பெளண்டரிகள் அடங்கலாக 37 ஓட்டங்களை குவிக்க, ஜொஹான்னே டி சில்வா ஒரு சிக்ஸர் மற்றும் 4 பெளண்டரிகள் உடன் 45 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
தொடர்ந்து சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்த புனித ஜோசப் கல்லூரி அணிக்கு தினேத் ஜயக்கொடி மற்றும் திலேஷ் பெரேரா ஆகிய வீரர்களும் தமது சிறந்த துடுப்பாட்டம் மூலம் உதவி செய்தனர்.
அதன்படி இந்த வீரர்களின் துடுப்பாட்ட உதவியோடு புனித ஜோசப் கல்லூரி அணி, போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 189 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வலுவான நிலையில் காணப்படுவதுடன், எதிரணி வீரர்களை விட 30 ஓட்டங்களால் மட்டுமே பின்தங்கி காணப்படுகின்றது.
புனித ஜோசப் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் தினேத் ஜயக்கொடி அரைச்சதம் ஒன்றை தாண்டி 62 ஓட்டங்களுடனும், திலேஷ் பெரேரா 37 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று நம்பிக்கை தருகின்றனர்.
>>இந்த ஆண்டும் பலத்த எதிர்ப்பார்ப்புக்களோடு இடம்பெறும் ஆனந்த – நாலந்த மோதல்
இதேநேரம் புனித பேதுரு கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் கனிஷ்க மதுவந்த 2 விக்கெட்டுக்களையும், ரன்மித் ஜயசேன ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Banuka de Silva | lbw b Ashan De Alwis | 5 | 21 | 0 | 0 | 23.81 |
Dinith Anjula | c Miranga Wickramage b Dunith Wellalage | 41 | 74 | 4 | 2 | 55.41 |
Santhush Gunathilake | c Dilesh Perera b Ashen Daniel | 72 | 105 | 6 | 0 | 68.57 |
Ranmith Jayasena | b Shalinda Senevirathne | 21 | 27 | 1 | 0 | 77.78 |
Nipunaka Fonseka | lbw b Ashen Daniel | 21 | 63 | 1 | 0 | 33.33 |
Shivan Perera | c Sachintha Ravindu b Ashen Daniel | 9 | 13 | 1 | 0 | 69.23 |
Shannon Fernando | c Shevon Fonseka b Shalinda Senevirathne | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Kanishka Maduwantha | c Shevon Fonseka b Lakshan Gamage | 10 | 18 | 0 | 0 | 55.56 |
Wanuja Sahan | run out (Lakshan Gamage) | 26 | 28 | 1 | 0 | 92.86 |
Ruwin Senevirathne | b Lakshan Gamage | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Tariq Saboor | not out | 1 | 6 | 0 | 0 | 16.67 |
Extras | 13 (b 7 , lb 3 , nb 1, w 2, pen 0) |
Total | 219/10 (60 Overs, RR: 3.65) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Lakshan Gamage | 10 | 1 | 38 | 2 | 3.80 | |
Ashan De Alwis | 7 | 0 | 20 | 1 | 2.86 | |
Shalinda Senevirathne | 13 | 2 | 43 | 2 | 3.31 | |
Johanne De Zilva | 4 | 2 | 8 | 0 | 2.00 | |
Ashen Daniel | 15 | 1 | 58 | 3 | 3.87 | |
Dunith Wellalage | 11 | 1 | 43 | 1 | 3.91 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Shevon Fonseka | c Nipunaka Fonseka b Ranmith Jayasena | 37 | 69 | 4 | 0 | 53.62 |
Johanne De Zilva | c Santhush Gunathilake b Kanishka Maduwantha | 45 | 56 | 4 | 1 | 80.36 |
Shevon Daniel | lbw b Kanishka Maduwantha | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Dineth Jayakody | b Shivan Perera | 77 | 110 | 6 | 2 | 70.00 |
Dilesh Perera | c Shivan Perera b Tariq Saboor | 62 | 80 | 4 | 0 | 77.50 |
Lakshan Gamage | b Tariq Saboor | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Sachintha Ravindu | c Wanuja Sahan b Ranmith Jayasena | 22 | 15 | 0 | 0 | 146.67 |
Dunith Wellalage | c Nipunaka Fonseka b Santhush Gunathilake | 19 | 15 | 0 | 0 | 126.67 |
Ashen Daniel | not out | 5 | 6 | 0 | 0 | 83.33 |
Shalinda Senevirathne | not out | 9 | 9 | 0 | 0 | 100.00 |
Extras | 9 (b 0 , lb 4 , nb 4, w 1, pen 0) |
Total | 286/8 (60 Overs, RR: 4.77) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Tariq Saboor | 11 | 0 | 51 | 2 | 4.64 | |
Santhush Gunathilake | 12 | 1 | 56 | 1 | 4.67 | |
Wanuja Sahan | 6 | 0 | 27 | 0 | 4.50 | |
Shivan Perera | 4 | 1 | 23 | 1 | 5.75 | |
Kanishka Maduwantha | 12 | 1 | 51 | 2 | 4.25 | |
Ruwin Senevirathne | 8 | 0 | 41 | 0 | 5.12 | |
Ranmith Jayasena | 7 | 0 | 33 | 2 | 4.71 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Banuka de Silva | c Dunith Wellalage b Ashan De Alwis | 4 | 11 | 0 | 0 | 36.36 |
Dinith Anjula | c Johanne De Zilva b Ashen Daniel | 6 | 22 | 0 | 0 | 27.27 |
Santhush Gunathilake | not out | 161 | 190 | 11 | 0 | 84.74 |
Shannon Fernando | c & b Shalinda Senevirathne | 25 | 47 | 3 | 0 | 53.19 |
Ranmith Jayasena | st Sheran Fonseka b Ashen Daniel | 3 | 13 | 0 | 0 | 23.08 |
Nipunaka Fonseka | b Lakshan Gamage | 11 | 39 | 1 | 0 | 28.21 |
Shivan Perera | run out (Dunith Wellalage) | 12 | 16 | 2 | 0 | 75.00 |
Kanishka Maduwantha | not out | 89 | 138 | 7 | 0 | 64.49 |
Extras | 6 (b 3 , lb 0 , nb 2, w 1, pen 0) |
Total | 317/6 (79 Overs, RR: 4.01) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Lakshan Gamage | 8 | 0 | 22 | 1 | 2.75 | |
Ashan De Alwis | 7 | 0 | 36 | 1 | 5.14 | |
Ashen Daniel | 23 | 2 | 65 | 2 | 2.83 | |
Dunith Wellalage | 14 | 1 | 59 | 0 | 4.21 | |
Shalinda Senevirathne | 18 | 1 | 66 | 1 | 3.67 | |
Johanne De Zilva | 7 | 0 | 58 | 0 | 8.29 | |
Shevon Daniel | 2 | 0 | 8 | 0 | 4.00 |
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<