உள்ளூர் கழக மட்டத்தில் உள்ள திறமையான வீரர்களை இனங்காணும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்துள்ள முதல்தர கழகங்களுக்கிடையிலான இருபதுக்கு 20 தொடரின் முதல் வாரத்தின் நான்காவது நாளான இன்று (07) எட்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில் கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்காக மினோத் பானுக்க, அஷான் ப்ரியன்ஞன், SSC கழகத்துக்காக நுவனிந்து பெர்னாண்டோ, க்ரிஷான் சன்ஜுல, பதுரெலிய கிரிக்கெட் கழகத்துக்காக திலகரட்ன சம்பத் மற்றும் NCC கழகத்துக்காக அஞ்சலோ பெரேரா உள்ளிட்ட வீரர்கள் அரைச்சதமடித்து தங்களது அணிகளின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.
இலங்கை டெஸ்ட் அணியில் இளம் வீரர் பெதும் நிஸ்ஸங்க
இதுஇவ்வாறிருக்க, கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் வெற்றியில் தனஞ்ஜய லக்ஷானும் (31), இராணுவ கிரிக்கெட் கழகத்தின் வெற்றியில் அசேல குணரட்னவும் (31) தமது அபார ஆட்டத்தை வெளிப்பிடுத்தியிருந்தனர்.
இதேவேளை, பதுரெலிய கிரிக்கெட் கழகத்தின் நிமன்த மதுஷங்க ஐந்து விக்கெட்டுக்களை எடுத்தார்.இம்முறை மேஜர் T20 லீக்கில் பதிவாகிய இரண்டாவது ஐந்து விக்கெட் குவியல் இதுவாகும்.
கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்
(பி. சரா ஓவல் மைதானம்)
நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 155/9 (20) – அஞ்சலோ ஜயசிங்ஹ 43, லஹிரு மிலன்த 39, ரொஸ்கோ டட்டில் 34, மாலிந்த புஷ்பகுமார 3/22
கொழும்பு கிரிக்கெட் கழகம் – 161/3 (19.3) – மினோத் பானுக்க 85*, அஷான் ப்ரியன்ஞன் 50, டில்ஷான் முனவீர 1ஃ20
முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றி
முவர்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் SSC கழகம்
(கட்டுநாயக்க மைதானம்)
முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 156/6 (20) – பபசர வடுகே 43, மஹேல உடவத்த 38, மொஹமட் சமாஸ் 29, ஜீவன் மெண்டிஸ் 24, கலன பெரேரா 2/18
SSC கழகம் – 159/3 (19.3) – நுவனிந்து பெர்னாண்டோ 61*, க்ரிஷான் சன்ஜுல 50, அதிஷ திலன்சன 2/21
முடிவு – SSC கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றி
மேஜர் T-20 லீக்கில் லஹிரு உதார அரைச்சதம்: 5 விக்கெட்டுக்களை எடுத்த ரொஸ்கோ
NCC கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்
(CCC மைதானம்)
NCC கழகம் – 169/6 (20) – அஞ்சலோ பெரேரா 57*, தினித் ஜயகொடி 57, சாலிய சமன் 3/32, ரொஷான் ஜயதிஸ்ஸ 2/35
லங்கன் கிரிக்கெட் கழகம் – 49/10 (13.1) – விமுக்தி பெரேரா 10, சாமிக குணசேகர 3/05, சாமிக கருணாரத்ன 3/09, அஷேன் டேனியல் 2/05
முடிவு – NCC கழகம் 120 ஓட்டங்களால் வெற்றி
காலி கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்
(பி. சரா ஓவல் மைதானம்)
காலி கிரிக்கெட் கழகம் – 114/9 (20) – எரங்க ரத்னாயக்க 30, இமேஷ் உதயங்க 23, நிமன்த மதுஷங்க 5/19
பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 115/5 (15.5) – திலகரட்ன சம்பத் 55, யசோத லங்கா 29, நிமேஷ் பெரேரா 2/26
முடிவு – பதுரெலிய கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்
(CCC மைதானம்)
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 177/8 (20) – ஜெஹான் டேனியல் 44*, சங்கீத் குரே 37, தனஞ்ஜய லக்ஷான் 31, ஹேஷான் தனுஷ்க 25, ப்ரியமால் பெரேரா 23, லசந்த ருக்மால் 3/38, அசன்த சிங்கப்புலி 2/23, நிமேஷ மெண்டிஸ் 2/50
விமானப்படை விளையாட்டுக் கழகம் – 127/10 (18.4) – சாமர பெர்னாண்டோ 33, உதயங்க பராக்ரம 28, நலின் ப்ரியதர்ஷன 3/17, ரொஷான் சன்ஜய 2/26
முடிவு – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 50 ஓட்டங்களால் வெற்றி
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்
(NCC மைதானம்)
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 118/10 (19.1) – யொஹான் மெண்டிஸ் 25, ரவிந்து பெர்னாண்டோ 25, சிதார கிம்ஹான் 22, இஷான் ஜயரட்ன 3/24, பினுர பெரனாண்டோ 3/22, ஜானக சம்பத் 2/11
ராகம கிரிக்கெட் கழகம் – 119/8 (20) – இஷான் ஜயரட்ன 22, ஷிரான் பெர்னாண்டோ 3/20, ப்ரமோத் மதுஷான் 3/27
முடிவு – ராகம கிரிக்கெட் கழகம் 2 விக்கெட்டுக்களால் வெற்றி
இராணுவ கிரிக்கெட் கழகம் எதிர் பாணந்துறை விளையாட்டுக் கழகம்
(NCC மைதானம்)
பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 75/10 (17.3) – கொஷான் தனுஷ்க 25, யசோத மெண்டிஸ் 3/14, மஹீஷ் தீக்ஷன 2/11, சீக்குகே பிரசன்ன 2/18
இராணுவ கிரிக்கெட் கழகம் – 76/3 (11.2) – அசேல குணரட்ன 31*, துஷான் விமுக்தி 22
முடிவு – இராணுவ கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றி
களுத்துறை நகர கிரிக்கெட் கழகம் எதிர் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்
(கட்டுநாயக்க மைதானம்)
குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 161/5 (20) – முதித்த ப்ரேமதாஸ 39*, கயான் மனீஷன் 30, தனுஷ்க தர்மசிறி 34, இசன்க சிறிவர்தன 2/28
களுத்துறை நகர கிரிக்கெட் கழகம் – 106/9 (20) – பன்சிலு தேஷான் 23, லஹிரு ஜயரட்ன 2/08, சமீர் சந்தமால் 2/15, ரன்தீர ரணசிங்ஹ 2/29
முடிவு – குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் 55 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<