அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ள 21ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் 13 வகையான போட்டிகளுக்காக இலங்கை சார்பில் 79 வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட 40 அதிகாரிகள் அடங்கலாக மொத்தம் 139 பேர் கலந்து கொள்ளவுள்ளதாக தேசிய ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.
இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் தொடரில் கிழக்கு வீரர்கள் அபாரம்
இந்தோனேஷியாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்.. முன்னதாக பெண்களுக்கான 1,500 …
இதேநேரம், பொதுநலவாய போட்டிகளுக்கான இலங்கை அணியின் பிரதானியாக தேசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் முன்னாள் பொருளாளர் காமினி ஜயசிங்க செயற்படவுள்ளதுடன், முகாமையாளராக இலங்கை ஹொக்கி சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சுமித எதிரிசிங்க செயற்படவுள்ளார்.
இந்நிலையில் பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் 3 வாரங்கள் எஞ்சியுள்ள நிலையில் குறித்த போட்டித் தொடரில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை நீச்சல் அணி வீரர்கள், மேலதிக பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாளைய தினம்(14) அவுஸ்திரேலியா நோக்கி பயணமாகவுள்ளனர். அத்துடன், இலங்கை பளுதூக்கல் அணி எதிர்வரும் 28ஆம் திகதி கோல்ட் கோஸ்ட் பயணமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம், இலங்கை மெய்வல்லுனர் அணியைச் சேர்ந்த உயரம் பாய்தல் வீரர் மஞ்சுல குமார, குறுந்தூர வீராங்கனை ருமேஷிகா ரத்னாயக்க மற்றும் மரதன் ஓட்ட வீராங்கனை ஹிருனி விஜேரத்ன ஆகியோர் ஏற்கனவே அவுஸ்திரேலியாவுக்கு சென்று பயிற்சிகளைப் பெற்றுவகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அரைமரதன் தொடரில் சொந்த தேசிய சாதனையை முறியடித்துள்ள ஹிருனி
அமெரிக்காவில் வசித்து வரும் இலங்கை மரதன் ஓட்ட வீராங்கனையான ஹிருனி விஜேயரத்ன …
1930ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழா முதற்தடவையாக நடைபெற்ற போதிலும், 1958ஆம் ஆண்டுதான் இலங்கையிலிருந்து வீரர்கள் இப்போட்டித் தொடரில் முதற்தடவையாக கலந்துகொண்டனர். அன்றிலிருந்து இன்று வரை 4 தங்கம், 7 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்தமாக 14 பதக்கங்களை இலங்கை வென்றுள்ளது.
எனினும், 1994ஆம் ஆண்டு கனடாவின் விக்டோரியாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவில் இலங்கை அணி ஒரு தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 16ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமையே இலங்கை அணியின் சிறந்த பெறுபேறாக அமைந்திருந்தது.
பிரித்தானிய காலணித்துவ ஆட்சியின் கீழ் இருந்து சுதந்திரமடைந்த சுமார் 53 நாடுகள் பங்கேற்கும் இவ்விளையாட்டு விழாவானது உலகின் 2ஆவது ஒலிம்பிக் போட்டிகள் என வர்ணிக்கப்படுகின்றது. அத்துடன் ஒவ்வொரு 4 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற இவ்விளையாட்டு விழாவின் 21ஆவது அத்தியாயம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.