ஐ.சி.சி., டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங்கில் (தரவரிசை)

163
டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. இதில் அஞ்சலோ  மதிவவ்ஸ் தலைமையிலான இலங்கை  அணி, 96 புள்ளிகளுடன் 6வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்திய அணி (93 புள்ளி), 7வது இடத்துக்கு தள்ளபட்டுளுள்ளது. முதல் மூன்று இடங்களில் தென் ஆப்ரிக்கா (124 புள்ளி), ஆஸ்திரேலியா (119), இங்கிலாந்து (104) அணிகள் உள்ளன.      
ஆட்டகரகள் தரவரிசையில், முதல் மூன்று இடங்களில் இலங்கையின் சங்ககரா, தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ், ஆம்லா உள்ளனர். இந்திய வீரர் ஒருவர் கூட ‘டாப்–10’ வரிசையில் இடம் பெறவில்லை. இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, 12வது  இடத்தில் உள்ளார். 
பந்து வீச்சாளார் தரவரிசையிலும் இந்திய வீரர் ஒருவர் கூட ‘டாப்–10’ பட்டியலில் இடம் பெறவில்லை. இந்தியா சார்பில் அஷ்வின் (14வது இடம்), இஷாந்த் சர்மா (18வது) ஆகியோர் ‘டாப்–20’ வரிசையில் உள்ளனர்.      
‘ஆல்–ரவுண்டர்களுக்கான’ ரேங்கிங்கில் இந்தியாவின் அஷ்வின் 3வது இடத்தில் உள்ளார். முதலிரண்டு இடங்களில் வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன், தென் ஆப்ரிக்காவின் பிலாண்டர் உள்ளனர்.