கனிஷ்ட மெய்வல்லுனரில் தொடர்ந்து முறியடிக்கப்படும் போட்டி சாதனைகள்

404

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 56 ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 3 ஆவது நாளான இன்றைய தினம், 3 போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.

எனினும், மைதான நிகழ்ச்சகளில் இன்றைய தினமும் தமது திறமைகளை வெளிப்படுத்திய வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வீரர்கள் 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.

இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் சுசிந்திரகுமார் மிதுன்ராஜ், பெண்களுக்கான ஈட்டி எறிதலில் மூதூர் பட்டித்திடல் மஹா வித்தியாலத்தைச் சேர்ந்த நாகேந்திரம் உதயவானி மற்றும் யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரியைச் சேர்ந்த சந்திரசேகரன் சங்கவி ஆகிய வீராங்கனைகள் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.

மிதுனுக்கு 2ஆவது பதக்கம்

Mithun Raj

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 56 ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் சுசிந்திரகுமார் மிதுன்ராஜ், 54.33 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இரண்டாம் நாள் கனிஷ்ட மெய்வல்லுனரில் மேலும் 9 சாதனைகள் முறியடிப்பு

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 56 ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 2 ஆவது நாளான நேற்றைய தினம், மைதான நிகழ்ச்சிகளை

அண்மைக்காலமாக தேசிய மற்றும் அகில இலங்கை பாடசாலை மட்டத்தில் மைதான நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று வருகின்ற மிதுன்ராஜ், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஈட்டி எறிதல் போட்டியில் இன்று போட்டியிட்டார்.

ஆரம்ப சுற்றுக்களில் சிறந்த தூரங்களைப் பதிவு செய்து முன்னிலை பெற்ற மிதுனுக்கு, இறுதி சுற்றுக்களில் எதிர்பார்த்தளவு திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனது. இதன்படி, 54.33 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த அவர், இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் தனது 2 ஆவது பதக்கத்தையும் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில், கடந்த வருடம் நடைபெற்ற சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குபற்றியிருந்த மிதுன்ராஜ், 63.01 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், அதற்கு முன் நடைபெற்ற 33 ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் ஈட்டி எறிதல் போட்டியில் 53.65 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெண்கலப்பதக்கத்தினையும் வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேநேரம், இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளின் இரண்டாவது நாளான நேற்று (24) நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்ட மிதுன்ராஜ், 14.07 மீற்றர் தூரத்தை எறிந்து அக்கல்லூரிக்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த போட்டியில் மிதுனுக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்த கொழும்பு புனித பேதுரு கல்லூரியைச் சேர்ந்த ருமேஷ் தரங்க 65.26 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

Tharanga

முன்னதாக 2001 ஆம் ஆண்டு கொழும்பு நாலந்த கல்லூரியைச் சேர்ந்த ஐ.ஏ பரணகம, 62.27 மீற்றர் தூரத்தை எறிந்து நிலைநாட்டிய சாதனையை 17 வருடங்களுக்குப் பிறகு ருமேஷ்தரங்க முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், நேற்று முன்தினம் நடைபெற்ற தட்டெறிதல் போட்டியிலும் பங்குபற்றியிருந்த ருமேஷ் தரங்க, 55.34 மீற்றர் தூரத்தை எறிந்து மிதுன்ராஜினால் கடந்த வருடம் நடைபெற்ற சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் நிகழ்த்தியிருந்த சாதனையையும் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈட்டி எறிதலில் உதயவானி, சங்கவி அபாரம்

பெண்களுக்கான 20 வயதுக்கு உட்பட்ட ஈட்டி எறிதலில் கலந்து கொண்ட மூதூர் பட்டித்திடல் மஹா வித்தியாலத்தைச் சேர்ந்த நாகேந்திரம் உதயவானி மற்றும் யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரியைச் சேர்ந்த சந்திரசேகரன் சங்கவி ஆகிய வீராங்கனைகள் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.

2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஈட்டி எறிதல் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வந்த உதயவானி, இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் 34.92 மீற்றர் தூரத்தை எறிந்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், முன்னதாக கடந்த வருடம் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனரிலும் அவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்திலிருந்து அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பெற்று வருகின்ற உதயவானி போன்ற வீராங்கனைகளை மேலும் ஊக்கப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் உடனே கவனம் செலுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்பார்ப்பாகும்.

கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண வீரர் புவிதரன் புதிய சாதனை

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித்

அதிலும் குறிப்பாக பல்வேறு கஷ்டத்துக்கு மத்தியில் பாடசாலைக் கல்வியுடன் விளையாட்டையும் முன்னெடுத்து வருகின்ற உதயவானியின் வெற்றிப் பயணத்துக்கு எமது இணையத்தளத்தின் வாயிலாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின் றோம்.

Sangavi and Udayawani

இதேவேளை, கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற சாவகச்சேரி இந்து கல்லூரியின் சந்திரசேகரன் சங்கவி, இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதலில் கலந்துகொண்டு 33.73 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

எனினும், இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனரில் 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் கலந்துகொண்ட சங்கவி, முதல் சுற்றுடன் வெளியேறினார்.

இந்நிலையில், 37.40 மீற்றர் தூரத்தை எறிந்த பாணந்துறை அகமதி பாலிகா மஹா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஹஸ்னா இராஷா டீன் இப்போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

100 மீற்றர் இறுதிப் போட்டியில் சபான்

Safan

ஆண்களுக்கான குறுந்தூர ஓட்டப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிகவெரட்டியவைச் சேர்ந்த மொஹமட் சபான், ஆண்களுக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.

இன்று மாலை நடைபெற்ற 23 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் 3ஆவது அரையிறுதிப் போட்டியில் கலந்துகொண்ட சபான், போட்டியை 10.97 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், முன்னதாக நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் அவர் 10.98 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்திருந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், நேற்று (24) நடைபெற்ற 23 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றரில் கலந்துகொண்ட மொஹமட் சபான், போட்டியை 21.50 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய போட்டி சாதனையுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

நிகவெரட்டிய அம்புக்காகம முஸ்லிம் மஹா வித்தியாலத்தின் பழைய மாணவரான மொஹமட் சபான், அண்மைக்காலமாக 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்து வருகின்ற மற்றுமொரு இளம் வீரர் ஆவார்.

எனினும், இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.96 செக்கன்களில் நிறைவுசெய்து 2ஆவது இடத்தையும் அவர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

3 போட்டி சாதனைகள் முறியடிப்பு

நவீனமயப்படுத்தப்பட்ட சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இதுவரை ஒரு தேசிய சாதனையுடன், 20 போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன.

புதிய அனுபவத்துடன் சொந்த தேசிய சாதனையை முறியடித்த அனித்தா

கோலூன்றிப் பாய்தலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தானே தனது சொந்த

இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் கொழும்பு புனித பேதுரு கல்லூரியைச் சேர்ந்த ருமேஷ் தரங்க 65.26 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டி சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் குருநாகல் மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட டி.எம் போகொட, 48.55 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து புதிய போட்டி சாதனையை நிகழ்த்தியிருந்ததுடன், 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 55.94 செக்கன்களில் நிறைவு செய்த வலள ஏ. ரத்னாயக்க கல்லூரியின் ஷியாமலி குமாரசிங்கவும் புதிய போட்டி சாதனையை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.