ஐந்தாவது தடவையாகவும் மஸ்டாங் கிண்ணத்தை தம்வசமாக்கிய தோமியர் கல்லூரி

193
St.Thoma's College

இன்று (17) இடம்பெற்று முடிந்திருக்கும், கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் புனித தோமியர் கல்லூரி அணிகளுக்கு இடையிலான, 43 ஆவது மஸ்டாங் கிண்ணத்திற்கான வருடாந்த (ஒரு நாள்) போட்டியில், 131 ஓட்டங்களால் றோயல் கல்லூரி அணியை அபாரமாக வீழ்த்திய புனித தோமியர் கல்லூரி இந்த வெற்றி மூலம் தொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாகவும் கிண்ணத்தை சுவீகரித்திருக்கின்றது.

கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கலன பெரேரா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தமது அணிக்காக தேர்வு செய்து கொண்டார்.

இதன்படி முதலில் துடுப்பாடிய தோமியர் கல்லூரி அணி மெதுவான ஆரம்பம் ஒன்றையே தந்திருந்தது. அணித் துடுப்பாட்ட வீரர்கள் எவரும் பெரிதாக ஓட்டங்கள் சேர்க்கத் தவறிய நிலையில் கலன பெரேரா மற்றும் தெவின் ஏரியகம ஆகியோரே தமது தரப்புக்கு முறையே 37 மற்றும் 36 ஓட்டங்களுடன் வலுவளித்திருந்தனர். இவர்கள் தவிர ஏனைய வீரர்கள் குறைவான ஒட்டங்களுடன் மைதானத்தினை விட்டு வெளியேறியிருந்தனர்.

Photos: Royal College vs S. Thomas’ College | 43rd Mustangs Trophy 2018

ThePapare.com | Viraj Kothalawala & Brian Dharmasena | 17/03/2018 Editing

இதனால், 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களைப் பறிகொடுத்த தோமியர் கல்லூரி அணி 216 ஓட்டங்களினைப் பெற்றுக் கொண்டது. றோயல் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பாக யுவின் ஹேரத் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைச் சரித்திருந்தார்.

பின்னர் சவால் குறைந்த வெற்றி இலக்கான 217 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெற பதிலுக்கு துடுப்பாடிய றோயல் கல்லூரி ஆரம்பத்தில் இருந்தே எதிரணியின் பந்துவீச்சுக்கு திக்குமுக்காடியது.

அசிங்கமான நடத்தைக்காக சகிப், நூருலுக்கு ஐ.சி.சி அபராதம்

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்றுவருகின்ற சுதந்திர கிண்ண

தொடர்ச்சியான முறையில் விக்கெட்டுக்களை பறிகொடுத்த றோயல் கல்லூரி அணியினருக்கு ஓட்டங்கள் சேர்ப்பதும் சிரமமாக அமைந்திருந்தது. தமது இலக்கு எட்டும் பயணத்தில் 34 ஓவர்களைக் கூட தாக்குப் பிடிக்க முடியாத றோயல் கல்லூரி அணியனர் கடைசியில் 85 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து படுதோல்வியடைந்தனர்.

றோயல் கல்லூரி சார்பாக துடுப்பாட்டத்தில் கவிந்து மதரசிங்க மாத்திரமே 20 ஓட்டங்களைத் தாண்டியிருந்தார். இதேவேளை தோமியர் கல்லூரியின் வலதுகை சுழல் வீரரான கிரிஷான் முனசிங்க வெறும் 32 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுக்களைச் சாய்த்து தனது தரப்பின் வெற்றியை உறுதி செய்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி – 216/9 (50) – கலன பெரேரா 37, தெவின் ஏரியகம 36, துலித் குணரத்ன 30, செலின் டி மெல் 22, யுவின் ஹேரத் 2/28

றோயல் கல்லூரி – 85 (33.4) – கவிந்து மதரசிங்க 23, கிரிஷான் முனசிங்க 5/32

முடிவு – புனித தோமியர் கல்லூரி 131 ஓட்டங்களால் வெற்றி

விருதுகள்

சிறந்த பந்துவீச்சாளர் – கிரிஷான் முனசிங்க (புனித தோமியர் கல்லூரி)

சிறந்த பந்துவீச்சாளர் – யுவின் ஹேரத் (றோயல் கல்லூரி)

சிறந்த துடுப்பாட்ட வீரர் – கலன பெரேரா (புனித தோமியர் கல்லூரி)

சிறந்த துடுப்பாட்ட வீரர் – கவிந்து மதரசிங்க (றோயல் கல்லூரி)

சிறந்த அறிமுக வீரர் – கிரிஷான் முனசிங்க (புனித தோமியர் கல்லூரி)

போட்டியின் ஆட்ட நாயகன் – கிரிஷான் முனசிங்க (புனித தோமியர் கல்லூரி)