42வது தேசிய விளையாட்டு விழாவில், பொலன்னறுவ கல்லேல்ல தேசிய உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற கரப்பந்தாட்டப் போட்டிகளில் மேல் மாகாண ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் சம்பியன்களாகத் தெரிவாகியுள்ளதன.
ஆடவர் சம்பியன்ஷிப் போட்டிகள்
ஆடவருக்கான இறுதிப் போட்டியில் மேல் மாகாண அணி, சபரகமுவ மாகாண அணியை 25-16, 22-25, 25-18 மற்றும் 25-21, என்ற புள்ளிகள் கணக்கில் வென்று சம்பியனாகியது.
மேல் மாகாண ஆடவர் அணி, முதல் செட்டில் சபரகமுவ மாகாண அணியை மிக இலகுவாக வென்ற போதும், இரண்டாம் செட்டில், சபரகமுவ மாகாண அணி வென்று செட்களை சமநிலைபடுத்தியது. எனினும், மேல் மாகாணம் இறுதி செட் இரண்டையும் போராடி வெற்றிகொண்டு தம்மை முன்னிலைப் படுத்திக் கொண்டது.
அரையிறுதிப் போட்டிகளில், சபரகமுவ மாகாண அணி நேரடியாக 27-25, 27-25, 25-21 என்ற புள்ளிகள் கணக்கில் வட மேல் மாகாண அணியை வெற்றிக்கொண்ட அதேவேளை, மேல் மாகாண ஆடவர் அணியும் முதல் மூன்று செட்களையும் 25-15, 25-21, 25-21 என்ற புள்ளிகள் கணக்கில் வட மத்திய மாகாண அணியை மிகவும் இலகுவாக வென்றிருந்தது.
ஆடவர் பிரிவு முடிவுகள்
காலிறுதி தகுதிகான் போட்டி
தென் மாகாணம் (21-25, 25-21, 25-20, 26-24) ஊவா மாகாணம்
காலிறுதிப் போட்டிகள்
மேல் மாகாணம் (25-10, 25-13, 25-14) மத்திய மாகாணம்
வட மத்திய மாகாணம் (25-22, 25-20, 25-22) தென் மாகாணம்
வடமேல் மாகாணம் (25-15, 25-16, 25-16) வட மாகாணம்
சபரகமுவ மாகாணம் (25-17, 25-17, 25-23) கிழக்கு மாகாணம்
மகளிர் சம்பியன்ஷிப் போட்டிகள்
மேல் மாகாண மகளிர் அணியும், வடமேல் மாகாண மகளிர் அணியும் சமபலத்துடன் மோதிக்கொண்ட இந்த விறுவிறுப்பான போட்டியில் இறுதியாக மேல் மாகாண மகளிர் அணி 26-24, 25-23, 23-25, 15-25 & 15-11 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
முதல் இரு செட்களில் மேல் மாகாண மகளிர் அணி வெற்றி பெற்ற போதும், வடமேல் மாகாண மகளிர் அணி மூன்றாவதும் மற்றும் நான்காவது செட்களில் வென்று திருப்பத்தை ஏற்படுத்தியது. தீர்க்கமான இறுதி செட்டில், போராட்டத்தின் மத்தியில் 15-11 என்ற புள்ளிகள் வீதத்தில் மேல் மாகாண மகளிர் அணி வெற்றி பெற்றது.
மகளிர் பிரிவில் 3வது இடத்துக்காக போட்டியிட்ட சபரகமுவ மாகாண அணி, தென் மாகாண அணியை 25-21, 25-15, 25-21 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கொண்டது.
அரையிறுதியில் தென் மாகாண மகளிர் அணியை 25-21, 25-12, 25-16 என்ற புள்ளிகள் கணக்கில் மேல் மாகாண மகளிர் அணி வெற்றி கொண்டதன் மூலம், அவ்வணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது. அதேபோன்று, வடமேல் மாகாண மகளிர் அணியும் 25-15, 25-14, 25-16 என்ற புள்ளிகள் கணக்கில் சபரகமுவ மாகாண மகளிர் அணியை வெற்றி கொண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மகளிர் பிரிவு முடிவுகள்
காலிறுதி தகுதிகான் போட்டி
சப்ரகமுவ மாகாணம் (25-13, 23-25, 28-26 மற்றும் 25-23) கிழக்கு மாகாணம்
காலிறுதிப் போட்டிகள்
வடமேல் மாகாணம் (25-07, 25-12, 25-13) ஊவா மாகாணம்
சப்ரகமுவ மாகாணம் (25-17, 25-23, 20-25, 25-11) வடமத்திய மாகாணம்
தென் மாகாணம் (25-07, 25-16, 25-06) வட மாகாணம்
மேல் மாகாணம் (25-10, 25-05, 25-09) மத்திய மாகாணம்