தென்னாபிரிக்காவில் நடைபெற்ற மூன்று அணிகள் மோதும் 3TC கிரிக்கெட் தொடரின் தங்கத்தினை ஏ.பி. டி வில்லியர்ஸ் தலைமையிலான ஈகல்ஸ் அணி வெற்றிகொண்டது. தொடரின் வெள்ளி மற்றும் வெண்கலத்தை முறையே டெம்பா பௌவுமா தலைமையிலான கைட்ஸ் மற்றும் ரீஸா ஹென்ரிக்ஸ் தலைமையிலான கிங்பிஷர்ஸ் அணிகள் கைப்பற்றின.
போட்டியின் குழுக்கள் முறையின் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்பிஷர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 6 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 56 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில், பெப் டு ப்ளெசிஸ் மற்றும் ஜெரல்ட் குர்ட்ஷே ஆகியோர் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு நகரும் IPL தொடர்
இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடர் எதிர்வரும் செப்டம்பர்
பின்னர் தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ஏ.பி. டி வில்லியர்ஸ் தலைமையிலான ஈகல்ஸ் அணி அபாரமாக ஆடி, ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 66 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஆட்டமிழக்காமல், டி வில்லியர்ஸ் மற்றும் எய்டன் மர்க்ரம் ஆகியோர் களத்தில் நின்றனர்.
இவ்விரு அணிகளின் பின்னர் களம் நுழைந்த டெம்பா பௌவுமா தலைமையிலான கைட்ஸ் அணி, பௌவுமா மற்றும் ஸ்மட்ஸ் ஆகியோர் துடுப்பாட்டங்களின் உதவியுடன் ஒரு விக்கெட்டினை இழந்து 58 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன் மூலம் முதல் பாதியில் அதிக ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஈகல்ஸ் அணி, இரண்டாவது பாதியில் முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பெற்றுக்கொண்டதுடன், இரண்டாவது அணியாக துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை கைட்ஸ் அணியும், மூன்றாவதாக துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை கிங்பிஷர் அணியும் பெற்றுக்கொண்டன.
அதன்படி களமிறங்கிய ஈகல்ஸ் அணி 66 ஓட்டங்களுடன் ஆட்டத்தை தொடங்கியதுடன், டி வில்லியர்ஸ் மற்றும் மர்க்ரம் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இருவரும் அரைச் சதத்தையும் கடந்தனர். இதில், மர்க்ரம் 33 பந்துகளுக்கு 70 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் 11 ஓட்டங்களுடன் களம் நுழைந்த டி வில்லியர்ஸ் 24 பந்துகளில் 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.
இவர்களின் இந்த மிகப்பெரிய பங்குடன் தங்களுடைய 12 ஓவர்களையும் துடுப்பாட்டத்தில் நிறைவுசெய்த ஈகல்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து மொத்தமாக 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஈகல்ஸ் அணியின் இந்த சவாலான ஓட்ட எண்ணிக்கையை எட்டும் நோக்கில் துடுப்பெடுத்தாடிய கைட்ஸ் அணியின் சார்பாக ப்ரிட்டோரியர்ஸ் அபாரமாக ஆடி அரைச் சதம் கடந்தார். இவர், தப்ரைஷ் சம்ஷியின் ஒரு பந்து ஓவரில் 28 ஓட்டங்களை விளாசியிருந்த போதும், அந்த அணியால் 12 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.
இறுதியாக 161 ஓட்டங்களை பெற்றால் தங்கம் என்ற நிலையில் 56 ஓட்டங்களுடன் களமிறங்கிய கிங்பிஷர்ஸ் அணி சார்பில், 12 பந்துகளில் 28 ஓட்டங்களை விளாசிய பெப் டு ப்ளெசிஸ் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் தடுமாறிய அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
அதன் அடிப்படையில் அதிக ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஏ.பி. டி வில்லியர்ஸின் ஈகல்ஸ் அணி, கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற மூன்று அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டியில் தங்கம் வென்றது.
சுருக்கம்
முதற்பாதி
- கிங்பிஷர்ஸ் அணி – 56/2 (6)
- ஈகல்ஸ் அணி – 66/1 (6)
- கைட்ஸ் – 58/1 (6)
இரண்டாவது பாதி
- ஈகல்ஸ் அணி – 94/3 (6) (மொத்த ஓட்டங்கள் – 160/4)
- கைட்ஸ் அணி – 80/2 (6) (மொத்த ஓட்டங்கள் – 138/3)
- கிங்பிஷர்ஸ் அணி- 57/2 (6) (மொத்த ஓட்டங்கள் – 113/5)
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க