ஜப்னா கல்லூரி மற்றும் புனித பத்திரிசியார் கல்லூரி அணிகள் இடையே மூன்றாவது முறையாக நடைபெற்று முடிந்திருக்கும் பொன் அணிகளின் சமர் T20 பெரும் போட்டியில் ஜப்னா கல்லூரி அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
அபிஷேக்கின் பந்துவீச்சில் சுருண்ட களுத்துறை திருச்சிலுவை கல்லூரி
புனித பத்திரிசியார் கல்லூரி அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்றிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மைதானச் சொந்தக்கார அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றுக் கொண்டது.
அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய புனித பத்திரிசியார் கல்லூரி அணி எதிரணி பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் 14.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 48 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.
பத்திரிசிரியார் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் கீர்த்தன் அதிகபட்சமாக 16 ஓட்டங்களை எடுக்க, ஜப்னா கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் மதுசன், சார்ம்திஸன், விஷ்னுகாந்த் மற்றும் பிருந்தன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
“பெங்களூர் ஆடுகளம் சராசரிக்கும் குறைவானது” – ஐசிசி அறிவிப்பு
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 49 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய ஜப்னா கல்லூரி அணி சற்று தடுமாறிய போதும் போட்டியின் வெற்றி இலக்கினை 17.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 49 ஓட்டங்களுடன் அடைந்தது.
ஜப்னா கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் வெற்றியினை விஷ்னுகாந்த் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நின்று உறுதி செய்தார். இதேநேரம், புனித பத்திரிசியார் கல்லூரி அணியின் பந்துவீச்சில் கீர்த்தன் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்தும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது.
போட்டியின் சுருக்கம்
புனித பத்திரிசியார் கல்லூரி – 48 (14.5) கீர்த்தன் 16, மதுசன் 2/08, பிருந்தன் 2/08
ஜப்னா கல்லூரி – 49/6 (17.2) விஷ்னுகாந்த் 16*, கீர்த்தன் 15/2
முடிவு – ஜப்னா கல்லூரி 04 விக்கெட்டுக்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<