தொடரை வென்றது இந்தியா

326
Sri Lanka vs India - 3rd T20

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரை இந்தியா அணி 2-1 என்ற ரீதியில் வெற்றி பெற்றது.தொடரை தீர்மானிக்கும் 3வது போட்டி இன்று (14) விசாகப்பட்டினத்தில்  நடைபெற்றது. இபோட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணிமுதலில் இலங்கை அணியை துடுப்பாட பணித்தது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை அணி 82/10 (18)

தசுன் சானக 19

திசர பெரேரா 12

ரவி அஷ்வின் 8/4

 

இந்தியா அணி 84/1 (13.5)

ஷீகர் தவான் 46*

அஜின்கிய ரஹானே 22*

துஸ்மந்த சமீர 14/1

 

இப்போட்டியில் 9 விக்கட்டுகளால் இந்தியா அணி வெற்றி பெற்று  போட்டி தொடரை கைபற்றியது. இப்போட்டி மற்றும் போட்டி தொடரின் நாயகனாக  ரவிஅஷ்வின் தெரிவுச் செய்யப்பட்டார்.

இப்போட்டியில்  இலங்கை இனிங்சில் அறிமுக வீரர் அசேல குணரத்ன மற்றும் சுழற்பந்து வீச்சாளர் சசித்ர சேனாநாயக்கவிற்கு நடுவர் சி.கேநந்தனால் வழங்கப்பட்ட  ஆட்டமிழப்பு தீர்ப்பு முறையற்றது. இது இலங்கை ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.