இலங்கை அபிவிருத்தி அணியினருக்கு ஆறுதல் வெற்றி

418
3rd ODI vs Zimbabwe

சிம்பாப்வே ஹராரே விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தின்போது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அபிவிருத்தி அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 49.4 ஓவர்களை எதிர்கொண்ட சிம்பாப்வே அபிவிருத்தி அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 232 ஓட்டங்களைக் குவித்தது.

சிம்பாப்வே அபிவிருத்தி  அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பிரியன் கசுசா 41 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.  இரண்டாவது விக்கட்டுக்காக  துடுப்பெடுத்தாடிய மசகண்டா 51 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இலங்கை அபிவிருத்தி அணி சார்பாகப் பந்துவீச்சில் கசுன் மதுசங்க மற்றும் அம்புல்தெனிய ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை வீழ்த்தினர்.

233 என்ற இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அபிவிருத்தி அணி 49.3 ஓவர்களை எதிர்கொண்டு 8 விக்கட்டுகளை இழந்து 235 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்து தொடரில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது.

இலங்கை அபிவிருத்தி அணி சார்பில் அசலங்க 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்ததோடு, அனுக் துமிந்து 37  ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். சிம்பாப்வே அபிவிருத்தி  அணி சார்பாகப் பந்துவீச்சில் முஸகண்டா, குஞ்செ மற்றும் மட்சிவா ஆகியோர் 2 விக்கட்டுகளை வீழ்த்தினர்.

இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கை அபிவிருத்தி அணியின் சரித் அசலங்க தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்  2-1 என்ற கணக்கில் சிம்பாப்வே அபிவிருத்தி அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

போட்டியின் சுருக்கம் –

சிம்பாப்வே அபிவிருத்தி அணி – 232 (49.4)

முசகண்டா  51, பிரியன் கசூசா 41

கசுன் மதுசங்க 3/47, அம்புல்தெனிய 3/31

இலங்கை அபிவிருத்தி  அணி – 235/8 (49.3)

அனுக் துமிந்து 37, அசலங்க 50

முஸகண்டா 2/25, குஞ்செ 2/29, மட்சிவா2/31