ஆசிய இளையோர் கரப்பந்தில் மியன்மாரை வீழ்த்திய இலங்கை

335

தற்பொழுது நடைபெற்று வரும் 23 வயதுக்கு உட்பட்ட ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் சுற்றுத் தொடரில் போட்டியை நடத்தும் மின்மார் அணியை 3-1 என்ற செட் கணக்கில் இலங்கை அணி வெற்றிகொண்டது. போட்டியின் முதல் செட்டில் பின்னடைவை சந்தித்த இலங்கை அணி அடுத்த மூன்று செட்களில் அபாரமாக செயற்பட்டு வெற்றியீட்டியது. 

ஆசிய கரப்பந்தாட்டம்: முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வி

23 வயதுக்கு உட்பட் மூன்றாவது ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப்…..

இந்தத் தொடரில் A குழுவில் ஆடும் இலங்கை அணி முதல் நாளான கடந்த சனிக்கிழமை அவுஸ்திரேலியாவிடம் 3-0 என தோல்வியை சந்தித்த நிலையிலேயே இன்று (04) மியன்மாரை எதிர்கொண்டது

இதன் முதல் செட்டில் இலங்கை வீரர்கள் சற்று தடுமாற்றம் கண்டதை அடுத்து புள்ளிகளை அதிகரித்துக் கொண்ட மியன்மார் கடைசியில் 25-18 என்ற புள்ளிகள் அடிப்படையில் அந்த செட்டை கைப்பற்றியது

எனினும் இரண்டாவது செட்டில் சுதாகரித்து ஆடிய 23 வயதுக்கு உட்பட்ட இலங்கை வீரர்கள் கடுமையாக போராடினர். இரு அணியும் மாறி மாறி புள்ளிகளை பெற்றதால் 25 புள்ளிகளை தாண்டி போட்டி பரபரப்பை எட்டியது. எவ்வாறாயினும் கடைசி வரை போராடிய இலங்கை 28-26 என்ற புள்ளிகளால் இந்த செட்டை கைப்பற்றியது

தொடர்ந்து தீர்க்கமான மூன்றாவது செட்டில் இலங்கை வீரர்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். அந்த சுற்றில் மியன்மாரை விடவும் அதிக புள்ளிகள் இடைவெளியில் முன்னிலை பெற்ற இலங்கை 25-19 என வெற்றியீட்டியது

ஆசிய கனிஷ்ட கரப்பந்தாட்ட தொடருக்கு மியன்மார் சென்றுள்ள இலங்கை அணி

மியன்மாரில் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை…..

இந்நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் நான்காவது செட்டிலும் இலங்கை வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். களைப்பு மிகுதியால் மியன்மார் வீரர்கள் தடுமாற்றம் காண வேகமாக ஆடிய இலங்கை வீரர்கள் 25-14 என்ற புள்ளிகள் அடிப்படையில் அந்த செட்டையும் கைப்பற்றினர்

இதில் இலங்கை அணிக்காக சிறப்பாக ஆடிய கவிந்து சந்திரசிறி அதிகபட்சமாக 17 புள்ளிகளை பெற்றுக்கொண்டார். தவிர ரஹேன் பெர்னாண்டோ 12 புள்ளிகளை பெற்றார்

இந்த குழுவின் தமது இறுதி மோதலாக இலங்கை அணி நாளை (05) ஹொங்கொங்கை எதிர்கொள்ளவுள்ளது

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<