SAG பதக்கம் வென்ற பாத்திமா சலிஹாவுக்கு தேசிய ஸ்குவாஷ் பட்டம்

198

இலங்கையின் முதல்நிலை ஸ்குவாஷ் வீராங்கனையான பாத்திமா சலிஹா இஸ்ஸடீன், தேசிய ஸ்குவாஷ் சம்பியன் பட்டத்தை முதல்தடவையாக வென்று அசத்தினார்.

இலங்கை ஸ்குவாஷ் சம்மேளனத்தினால் 39ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட சிரேஷ் வீரர்களுக்கான தேசிய ஸ்குவாஷ் சம்பியன்ஷிப் தொடர் நேற்று (22) இரத்மலானையில் உள்ள விமானப்படை ஸ்குவாஷ் அரங்கில் நடைபெற்றது.

தெற்காசிய விளையாட்டில் இலங்கைக்கு பெருமை சேர்த்த முஸ்லிம் வீராங்கனை சலிஹா

மற்ற துறைகளைப் போன்று விளையாட்டுத்துறையிலும்……..

முன்னணி வீர, வீராங்கனைகள் பங்குபற்றிய பெண்களுக்கான இறுதிப் போட்டியில் முன்னாள் சம்பியனான மிஹிலியா மெத்சரனியும், ஸ்குவாஷ் முதல்நிலை வீராங்கனையான பாத்திமா சலிஹாவும் பலப்பரீட்சை நடத்தினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை 11க்கு 9 என்ற புள்ளிகள் கணக்கில் பாத்திமா சலிஹா கைப்பற்றினார்

தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது செட்டை 11க்கு 9 என்ற புள்ளிகள் கணக்கில் மிஹிலியா மெத்சரினி கைப்பற்ற, 3ஆவது செட்டை மீண்டும் 11க்கு 7 என்ற புள்ளிகள் கணக்கில் சலிஹா கைப்பற்றினார்.

இந்த நிலையில், தீர்மானமிக்க 4ஆவது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சலிஹா, 11க்கு 5 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று முதல்முறையாக தேசிய ஸ்குவாஷ் சம்பியன் பட்டத்தை வென்றார்

சுமார் 11 வருடங்களுக்குப் பிறகு தேசிய மட்டப் போட்டியொன்றில் தேசிய ஸ்குவாஷ் சம்பியனான மிஹிலியா மெத்சரனியை சலிஹா வீழ்த்தியிருந்ததுடன், 3 வருடங்களுக்குப் பிறகு சிரேஷ் வீரர்களுக்கான தேசிய ஸ்குவாஷ் சம்பின்ஷிப்பில் மிஹிலியாவை வீழ்த்தி அவர் சம்பியன் பட்டம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SAG போட்டிகளில் 250 பதக்கங்களை வென்று வரலாறு படைத்த இலங்கை

நேபாளத்தின் கத்மண்டு மற்றும் பொக்கராவில் ………..

எதுஎவ்வாறாயினும், இவ்விரண்டு வீராங்கனைகளும், இம்முறை நேபாளத்தில் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான குழுநிலை ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தமை சிறப்பம்சமாகும்.   

இந்த நிலையில், பெண்களுக்கான தனிநபர் 3ஆவது மற்றும் 4ஆவது இடங்களுக்காக நடைபெற்ற போட்டியில் சமீரா டீனை வீழ்த்தி கசுனி குணவர்தன வெற்றியை தனதாக்கினார்

இதேவேளை, ஆண்கள் பிரிவில் நடப்புச் சம்பியனான ரவிந்து லக்சிறி, தனது பாடசாலை நண்பரும், சக வீரருமான சாமில் வகீலை 3க்கு 0 என்ற நேர் செட் கணக்கில் (11/9, 11/3, 11/5) வீழ்த்தி தொடர்ச்சியாக 7ஆவது தடவையாக தேசிய ஸ்குவாஷ் சம்பியன் பட்டத்தை வென்றார்

இந்த நிலையில், 3ஆவது இடத்துக்காக நடைபெற்ற போட்டியில் மொஹமட் ஹக்கீமை வீழ்த்திய கிஹான் சுவாரிஸ் வெற்றியை தனதாக்கினார்.  

>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<