இலங்கையில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான வருடாந்த எழுவர் கால்பந்து தொடரின் 38ஆவது போட்டித் தொடர் இம்மாதம் 16ஆம் திகதி, கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.
இம்முறை இடம்பெறவுள்ள போட்டித் தொடரில் மொத்தமாக 24 வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்த 30 அணிகள் பங்குகொள்ளவுள்ளன. முதல் சுற்றில், குறித்த அணிகள் 8 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, குழு மட்டப் போட்டிகள் லீக் அடிப்படையில் இடம்பெறும்.
பின்னர் ஒவ்வாரு குழுவிலும் முதல் இடத்தைப் பெறும் அணிகள் கிண்ணத்திற்கான பிரிவிலும் (Cup), இரண்டாம் இடத்தைப் பெறும் அணிகள் தட்டிற்கான பிரிவிலும் (plate), மூன்றாம் இடத்தினைப் பெறும் அணிகள் Bowl இற்கான பிரிவிலும் அடுத்த கட்டத்தில் போட்டியிடும். குறித்த போட்டிகள் அனைத்தும் நொக் அவுட் முறைப்படி இடம்பெறும்.
பிபா உலகக் கிண்ணத்திற்கு ஐந்தாவது முறையாகவும் தகுதி பெற்ற சவூதி அரேபியா
எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிபா (FIFA) உலகக் கிண்ணத்திற்கு சவூதி…
போட்டித் தொடரின் நிறைவில் அனைத்து பிரிவுகளிலும் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெறும் அணி வீரர்களுக்கு பணப் பரிசில், கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இவை தவிர, சிறந்த வீரர் மற்றும் சிறந்த கோல் காப்பாளர்களும் தெரிவு செய்யப்படுவர்.
பணப் பரிசு விபரம்
பிரிவு | சம்பியன் | இரண்டாம் இடம் |
கிண்ணத்திற்கான பிரிவு (Cap) | 100,000 ரூபாய் | 50,000 ரூபாய் |
தட்டிற்கான பிரிவு (plate) | 50,000 ரூபாய் | 25,000 ரூபாய் |
Bowl இற்கான பிரிவு | 25,000 ரூபாய் | 10,000 ரூபாய் |
கடந்த முறை இடம்பெற்ற போட்டித் தொடரில் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் அமானா தகாபுல் (காப்புறுதி) அணி வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த எக்ஸ்போ லங்கா நிறுவன அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது. எனினும் இம்முறை போட்டித் தொடரில் அமானா தகாபுல் நிறுவனத்தின் எந்தவொரு அணியும் பங்குகொள்ளவில்லை.
இந்த போட்டித் தொடர் தொடர்பிலான விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
அங்கு வர்த்தக நிறுவனங்களுக்கான கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் சைப் யூசுப் கருத்து தெரிவிக்கையில், ”இத்தொடரில் சுமார் 25 நிறுவனங்களின் பலம் மிக்க அணிகள் மோதுகின்றன. எனவே, இத்தொடரில் போட்டித் தன்மை அதிகமாக இருக்கும். இந்த தொடரை நாம் மேலும் விருத்தி செய்வதனால், வீரர்களும் தமக்கான தொழில்களைப் பெற்று தம்மை முன்னேற்றிக்கொள்வர்” என்றார்.
அணிகள் அங்கம் வகிக்கும் குழுக்கள்
குழு A | குழு B | குழு C | குழு D | குழு E | குழு F | குழு G | குழு H |
HNB – A | ExpoLanka – A | Commercial Bank – A | Sampath Bank – B | Sri Lanka Telecom | Standard Chartered Bank | Galadari Hotel | Continental Insurance |
Janashakthi Insurance | Sri Lankan Airlines | HSBC | Amana Bank | Commercial Credit | Colombo Dockyard | NTB | Dialog – B |
Commercial Bank – B | ExpoLanka – B | Airport & Aviation | Ceylinco Insurance | Dialog – A | HNB – B | WNS Global | John Keells |
Virtusa | Lake House | LB Finance – B | Sampath Bank – A | LB Finance – A | Commercial Leasing |