இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடருக்கான வீரர்கள் ஏலத்துக்கு, இலங்கை அணியை சேர்ந்த 31 வீரர்கள் பதிவுசெய்துள்ளதாக, ஐ.பி.எல். நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐ.பி.எல். 2021 இற்கான ஏலத்துக்கான வீரர்கள் பதிவு கடந்த 4ம் திகதியுடன் நிறைவுக்கு வந்திருந்தது. இதன்படி, ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்துக்காக பதிவுசெய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டிருந்தது.
>>மே.தீவுகளுக்கெதிரான தொடரை ஒத்திவைத்த இலங்கை!
அதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த 31 வீரர்கள், ஐ.பி.எல். ஏலத்துக்காக பதிவுசெய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வீரர்கள் ஏலத்துக்காக 814 இந்திய வீரர்கள் மற்றும் 283 வெளிநாட்டு வீரர்கள் என 1097 வீரர்கள் பதிவுசெய்துள்ளனர்.
இதில், தேசிய அணிகளுக்காக விளையாடிய 207 வீரர்கள் பதிவுசெய்துள்ளதுடன், தேசிய அணியில் அறிமுகமாகாத 863 வீரர்கள் மற்றும் அங்கத்துவ நாடுகளில் இருந்து 27 வீரர்களும் பதிவுசெய்துள்ளனர்.
ஐ.பி.எல். தொடரில் அணியொன்று அதிகபட்சமாக 25 வீரர்களை உள்ளடக்க முடியும். இம்முறை ஏலத்துக்கு பதிவுசெய்த வீரர்களிலிருந்து வெறும் 61 வீரர்களே அணிகளுக்காக இணைக்கப்படுவர். அத்துடன், மொத்தமாக 283 வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் பங்கெடுக்கும் நிலையில், 22 வீரர்களை மாத்திரமே அணிகளில் இணைத்துக்கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பதிவுசெய்துள்ள வீரர்கள்
- இந்திய வீரர்கள் (அறிமுகமானவர்கள்) – 21
- வெளிநாட்டு வீரர்கள் (அறிமுகமானவர்கள்) – 186
- அங்கத்துவ நாட்டு வீரர்கள் – 27
- அறிமுகமாகாத, குறைந்தது ஒரு ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய இந்திய வீரர்கள் – 50
- அறிமுகமாகாத, குறைந்தது ஒரு ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய வெளிநாட்டு வீரர்கள் – 2
- இந்திய வீரர்கள் (அறிமுகமாகாதவர்கள்) – 743
- வெளிநாட்டு வீரர்கள் (அறிமுகமாகாதவர்கள் – 68
அணிகள் மற்றும் வீரர்களின் எண்ணிக்கை
- ஆப்கானிஸ்தான் – 30
- அவுஸ்திரேலியா – 42
- பங்களாதேஷ் – 5
- இங்கிலாந்து – 21
- அயர்லாந்து – 2
- நேபாளம் – 8
- நெதர்லாந்து – 1
- நியூசிலாந்து – 29
- ஸ்கொட்லாந்து – 7
- தென்னாபிரிக்கா – 38
- இலங்கை – 31
- ஐக்கிய அரபு இராச்சியம் – 9
- அமெரிக்கா – 2
- மேற்கிந்திய தீவுகள் – 56
- ஜிம்பாப்வே 2
ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 18ம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த வீரர்கள் ஏலம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<