இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கையின் பிரதான கிரிக்கெட் கழகங்கள் இடையே ஒழுங்கு செய்திருக்கும் மேஜர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (30) மொத்தமாக 12 போட்டிகள் நிறைவடைந்திருந்தன.
ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் விளாசிய திசர பெரேரா
இன்று நிறைவுக்கு வந்த போட்டிகளினை நோக்கும் போது SSC அணி, தொடரில் தமது முதல் தோல்வியினை சோனகர் கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக பதிவு செய்தது.
அதேநேரம், கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், திசர பெரேரா தலைமையிலான இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம், தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் என்பன இலகு வெற்றிகளைப் பதிவு செய்திருந்தன.
இன்றைய நாளுக்கான துடுப்பாட்டத்தினை நோக்கும் போது மூன்று சதங்கள் ஒரே போட்டியில் பதிவாகின. அதன்படி, சோனகர் கிரிக்கெட் கழகத்திற்கும், SSC அணிக்கும் இடையிலான குறித்த போட்டியில் சோனகர் கழக வீரர்களான மஹேல உடவத்த (116) மற்றும் மொஹமட் ஷமாஸ் (111) ஆகிய இருவரும் சதம் கடந்திருக்க, SSC அணி சார்பில் ஷம்மு அசானும் (102) சதம் பெற்றிருந்தார்.
இதேநேரம், இன்றைய நாளில் பதிவான நான்காவது சதத்தினை தேசிய அணியின் வீரரான கொழும்பு கோல்ட்ஸ் அணியின் ப்ரிமயமால் பெரேரா (101) பெற்றிருந்தார். ப்ரியமால் பெரேரா தவிர, தேசிய அணியின் வீரர்களில் ஒருவரான சதீர சமரவிக்ரமவும் ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்கள் பெற்று சதம் பெறுவதற்கான ஒரு வாய்ப்பினை சிறிய இடைவெளி ஒன்றில் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு ஐவரடங்கிய குழுவை நியமிக்க உத்தரவு
பந்துவீச்சினை நோக்கும் போது றாகம கிரிக்கெட் கழகத்தின் வேகப்பந்துவீச்சாளரான பினுர பெர்னாந்து பாணதுறை கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக 6 விக்கெட்டுக்களைச் சாய்த்து அசத்தலாக செயற்பட்டிருக்க, தேசிய கிரிக்கெட் அணியின் அகில தனன்ஞயவும் கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் சார்பில் 4 விக்கெட்டுக்களைச் சாய்த்து திறமையினை வெளிக்காட்டியிருந்தார்.
இன்றைய போட்டிகளின் சுருக்கம்
- NCC எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்
மேரியன்ஸ் கிரிக்கெட் மைதானம், கட்டுநாயக்க
NCC – 177 (48.3) சத்துரங்க டி சில்வா 54, சாமிக்க கருணாரட்ன 48*, நிஷான் பீரிஸ் 3/32
நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 163 (47.1) அஷேன் சில்வா 54, லஹிரு மிலன்த 23, யூகிஸ டில்ஷான் 4/25
முடிவு – NCC அணி 14 ஓட்டங்களால் வெற்றி
- லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்
சர்ரேய் மைதானம், மக்கோன
லங்கன் கிரிக்கெட் கழகம் – 192 (49.3) ரிசித் உப்மால் 41, தமித்த சில்வா 40, சத்துர லக்ஷான் 3/24
காலி கிரிக்கெட் கழகம் – 193/6 (44.4) ராஜூ கயஷான் 52, இமேஷ் உதயங்க 38, தமித்த சில்வா 2/35
முடிவு – காலி கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுக்களால் வெற்றி
- பாணதுறை விளையாட்டுக் கழகம் எதிர் றாகம கிரிக்கெட் கழகம்
புளூம்பீல்ட் கிரிக்கெட் மைதானம், கொழும்பு
பாணதுறை வி.க. – 208 (38.4) கோஷான் தனுஷ்க 67, பினுர பெர்னாந்து 6/28
றாகம கிரிக்கெட் கழகம் – 211/3 (37.5) நிஷான் மதுஷ்க 82, இவாக்க சஞ்சுல 2/53
முடிவு – றாகம கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றி
- நுகேகொட வி.க. எதிர் தமிழ் யூனியன் கி.க.
P. சரவணமுத்து மைதானம், கொழும்பு
நுகேகொட வி.க. – 209/7 (50) லஹிரு ஜயக்கொடி 65, சிஹான் பெர்னாந்து 3/41
தமிழ் யூனியன் கி.க. – 210/3 (36.4) சதீர சமரவிக்ரம 92*, மனோஜ் சரச்சந்திர 50, நிபுன் லக்ஷான் 2/55
முடிவு – தமிழ் யூனியன் கி.க. 7 விக்கெட்டுக்களால் வெற்றி
- BRC எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்
BRC மைதானம், கொழும்பு
BRC – 119 (30.5) லஹிரு சமரக்கோன் 50, மலிந்த புஷ்பகுமார 3/21, லஹிரு கமகே 2/12
கொழும்பு கி.க. – 122/4 (17.3) ரொன் சந்திரகுப்தா 44, மினோத் பானுக்க 33
முடிவு – கொழும்பு கி.க. 7 விக்கெட்டுக்களால் வெற்றி
- சிலாபம் மேரியன்ஸ் கி.க. எதிர் கடற்படை வி.க.
கடற்படை மைதானம், வெலிசர
சிலாபம் மேரியன்ஸ் கி.க. – 240/8 (50) கமிந்து மெண்டிஸ் 67, புத்திக்க மதுஷன் 4/39
கடற்படை வி.க. – 241/7 (49.2) சானக்க ருவன்சிறி 51, லசித் குரூஸ்புள்ளே 24/2
முடிவு – கடற்படை வி.க. 3 விக்கெட்டுகளால் வெற்றி
- சோனகர் வி.க. எதிர் SSC
SSC மைதானம், கொழும்பு
சோனகர் வி.க. – 295/7 (50) மஹேல உடவத்த 116, மொஹமட் சமாஸ் 111, கலன பெரேரா 4/49
SSC – 290/9 (50) சம்மு அஷான் 102, கிரிஷான் சஞ்சுல 77, ப்ரவீன் ஜயவிக்ரம 3/65
முடிவு – சோனகர் வி.க. 5 ஓட்டங்களால் வெற்றி
- செரசன்ஸ் வி.க. எதிர் செபஸ்டியனைட்ஸ் கி.க.
டி சொய்ஸா சர்வதேச மைதானம், மொரட்டுவ
செரசன்ஸ் வி.க. – 276/5 (50) ஹஷான் துமிந்து 73, ப்ரமோத் மதுவன்த 60, மதீஷ பெரேரா 2/51
செபஸ்டியனைட்ஸ் கி.க. – 178/9 (50) மனேல்கர் டி சில்வா 58*, ஆகாஷ் செனரத்ன 2/20
முடிவு – செரசன்ஸ் வி.க. 98 ஓட்டங்களால் வெற்றி
- புளூம்பீல்ட் கி.க. எதிர் விமானப்படை வி.க.
விமானப்படை மைதானம், கட்டுநாயக்க
புளூம்பீல்ட் கி.க. – 205/8 (50) சச்சின் ஜயவர்தன 85, அனுக் டி அல்விஸ் 2/23
விமானப்படை வி.க. – 171 (43.1) அசன்த சிங்கபுலி 69, கயான் சிறிசோம 3/15, திலிப ஜயலத் 3/40
முடிவு – புளூம்பீல்ட் கி.க. 34 ஓட்டங்களால் வெற்றி
- கண்டி சுங்க வி.க. எதிர் இராணுவப்படை வி.க.
இராணுவப்படை மைதானம், பாணகொட
கண்டி சுங்க வி.க. – 116 (33.2) சஜித் டி சில்வா 28, மகேஷ் தீக்ஷன 3/16, துஷான் விமுக்தி 3/23, சீக்குகே பிரசன்ன 3/41
இராணுவப்படை வி.க. – 117/3 (21.5) ஹிமாஷ லியனகே 52*, சம்பத் பெரேரா 2/35
முடிவு – இராணுவப்படை வி.க. 7 விக்கெட்டுக்களால் வெற்றி
- ஏஸ் கெபிடல் கி.க. எதிர் களுத்துறை நகர கழகம்
ஆரோன்ஸ் கி.க. – 214/5 (50) இஷான் ரங்கண 68*, R. புஞ்சிவேவ 2/51
களுத்துறை நகர கழகம் – 215/4 (43.2) கிஹான் ரூபசிங்க 117*, லஹிரு அத்தநாயக்க 34
முடிவு – களுத்துறை நகர கழகம் 6 விக்கெட்டுக்களால் வெற்றி
- கொழும்பு கோல்ட்ஸ் கி.க. எதிர் பொலிஸ் வி.க.
கோல்ட்ஸ் மைதானம், கொழும்பு
கொழும்பு கோல்ட்ஸ் கி.க. – 313/7 (50) ப்ரியமல் பெரேரா 101, விஷாத் ரன்திக்க 69, சுஜான் மயூர 3/35
பொலிஸ் வி.க. – 116 (26.1) அகில தனன்ஞய 4/22, சந்துஷ் குணத்திலக்க 3/28
முடிவு – கோல்ட்ஸ் கி.க. 198 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<